தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா.... மொத்த எண்ணிக்கை 1,885 ஆக உயர்வு!
சென்னையில் மட்டும் இன்று 28 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 523 ஆக உயர்வு...
சென்னையில் மட்டும் இன்று 28 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 523 ஆக உயர்வு...
தமிழகத்தில் இன்று மேலும் 64 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்.... தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 25 பெண்களும், 39 ஆண்களும் அடங்குவர். இந்நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1885 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, வீட்டுக் கண்காணிப்பில் 29,056 பேரும், அரசு கண்காணிப்பில் 26 பேரும் உள்ளனர்.
சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 42 வயது நபர் உயிரிழந்துள்ளதால் மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 60 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1020 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் விகிதம் 54.11 ஆகவும், உயிரிழப்பு விகிதம் 1.27 ஆகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
District
|
Confirmed
|
|
Chennai | 28528 | |
Coimbatore | 141 | |
Tiruppur | 2112 | |
Dindigul | 80 | |
Madurai | 1575 | |
Erode | 70 | |
Tirunelveli | 65 | |
Namakkal | 459 | |
Chengalpattu | 55 | |
Thiruvallur | 154 | |
Thanjavur | 54 | |
Viluppuram | 451 | |
Tiruchirappalli | 51 | |
Theni | 44 | |
Nagapattinam | 44 | |
Karur | 41 | |
Ranipet | 38 | |
Tenkasi | 35 | |
Virudhunagar | 732 | |
Salem | 131 | |
Thiruvarur | 30 | |
Thoothukkudi | 27 | |
Cuddalore | 26 | |
Vellore | 23 | |
Tirupathur | 18 | |
Kancheepuram | 18 | |
Kanniyakumari | 16 | |
Ramanathapuram | 115 | |
Sivaganga | 12 | |
Tiruvannamalai | 11 | |
The Nilgiris | 9 | |
Perambalur | 7 | |
Kallakurichi | 16 | |
Ariyalur | 5 | |
Pudukkottai | 1 | |
Dharmapuri | 1 |
இன்று பதிவான தோற்றுக்களின் எண்ணிக்கையில், அதிகபட்சமாக சென்னையில் 28 பேரும், மதுரையில் 15 பேரும், விருதுநகரில் 7 பேரும் பாதிக்கபட்டுள்ளனர். சென்னையில் தற்போது மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 523 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 1279 ஆண்கள் மற்றும் 606 பெண்கள் என மொத்தம் 1885 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 7,495 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள்-110 பேர், 13 முதல் 60 வயதுடையவர்கள்-1554 பேர், 60 வயதுக்கு மேலானவர்கள்-221 பேர். இன்று ஒரே நாளில் 60 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். அதில் அதிகபட்சமாக செங்கல்பட்டில் 13 பேரும், திருவாரூரில் 12 பேரும், தஞ்சாவூரில் 10 பேரும், மதுரையில் 8 பேரும் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 838 பேர்.