சென்னையில் இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, சென்னையில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 1458 ஆக உயர்வு...!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் இன்று மேலும் 266 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,023 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உள்ளது. 


இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... தமிழகத்தில் இன்று மேலும் 266 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,023 ஆக உயர்ந்துள்ளது. கோவையில் 44 வயது முதியவர் உயிரிழந்ததை அடுத்து தமிழகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 203 பேர் உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,458 ஆக அதிகரித்துள்ளது. விழுப்புரத்தில் 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்த பாதிப்புகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 170 பேரும், 13 முதல் 60 வயதுக்குள் உள்ளவர்கள் 2564 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 289 பேரும் உள்ளனர். அவர்களில் 2015 ஆண்கள், 1007 பெண்கள், ஒரு திருநங்கை உள்ளனர்.


District
Confirmed
 
Active
Recovered
Deceased
Chennai

2031,463

1,196

27250

17
Coimbatore

4146

12

6133

11

Tiruppur 114 6 108 0
Viluppuram

3390

61 27 2
Madurai

290

45

143

2
Chengalpattu

190

40 48 2
Dindigul 81 8 72 1
Thiruvallur

272

27 45 0
Erode 70 0 69 1
Tirunelveli 65 8 57 0
Namakkal 61 11 50 0
Thanjavur 56 15

341

0
Tiruchirappalli 51 5 46 0
Nagapattinam 45 3 42 0
Theni 44 1 42 1
Karur 42 0 42 0
Kancheepuram 40 30 9 1
Ranipet 39 5 34 0
Cuddalore

939

13 26 0
Tenkasi

237

26 11 0
Salem 33 9 24 0
Virudhunagar 32 13 19 0
Thiruvarur 30 11

119

0
Thoothukkudi 27 0 26 1
Ariyalur

227

21 6 0
Vellore 23 6 16 1
Ramanathapuram 20 9 11 0
Tirupathur 18 1 17 0
Kanyakumari

117

7 10 0
Kallakurichi

615

12 3 0
Tiruvannamalai

112

2 10 0
Sivaganga 12 1 11 0
Perambalur 11 8 3 0
Nilgiris 9 0 9 0
Pudukkottai 1 1 0 0
Dharmapuri 1 1 0 0

இந்நிலையில், இன்று மட்டும் 38 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்த டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,379 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,611 பேர் சிகிச்சையில் உள்ளனர். வீட்டுக் கண்காணிப்பில் 37,206 பேரும், அரசுக் கண்காணிப்பில் 40 பேரும் உள்ளனர். ஒரே நாளில் 10,617 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன" என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.