இப்படி செய்வதற்கு ஓ. பன்னீர்செல்வத்திற்கு வெட்கமாக இல்லை -சி.வி. சண்முகம் கேள்வி
Tamil Nadu Political News: அதிமுக வங்கி கணக்குகள் முடக்கம் செய்யக்கோரி ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதிய ஓ.பி.எஸ் ஐநாவிற்கு கூட கடிதம் எழுதட்டும் அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேட்டி
சென்னை: அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம், கடந்த 11ஆம் தேதி ராயப்பேட்டை உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள், ஆவணங்கள் மற்றும் பொருட்கள் அள்ளி சென்று தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கத்தி, கட்பாரை போன்ற ஆயுதங்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் நூழைந்து, பொருள்கள், ஆவணங்களை திருடி சென்று விட்டார்கள். அனைத்து வாகனங்களையும் அடித்து நொறுக்கி உள்ளனர். உட்கட்சி பிரச்சனையில் அதிமுக தலைமை கழக்தத்தை அடித்து நொறுக்கி உள்ளனர். அதிமுக (Anna Dravida Munnetra Kazhagam) தலைமைக்கழகம் சீல் வைக்கப்பட்டதற்கு காரணம் ஓ.பி.எஸ். தான்.
அதிமுக தலைமை கழகம் சூறையாடப்பட்டது தொடர்பாக, மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் புகார் அளித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு முன்பு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் டிஜிபியிடம் மனு அளித்திருந்தார். காவல்துறை பாதுக்காப்பு இருந்தும் அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கலவரம், போதை நகரமாக தமிழகம் மாறி வருகிறது. காவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின் அந்த தகுதியை இழந்துள்ளார்.
மேலும் படிக்க: ஓபிஎஸ் மகன்கள் இருவரும் அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த அதிமுக தலைமை அலுவலத்தின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். இதையெல்லாம் செய்வதற்கு ஓ. பன்னீர்செல்வத்திற்கு வெட்கமாக இல்லையா எனக் கேள்வி எழுப்பினார்.
அதிமுக வின் ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தையும் ஓ.பன்னீர் செல்வம் அவர் வந்த வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்று விட்டார். ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறை புகாரை ஏற்றுக்கொண்டுள்ளனர். போலீசார் சி.எஸ்.ஆர் கொடுத்துள்ளனர்.
மேலும் படிக்க: அதிமுக வங்கிக் கணக்கில் பரிவர்த்தனை கூடாது: வங்கிக்கு ஓபிஸ் கடிதம்
அதிமுக பொருளாளர் என்று ஓ.பன்னீர் செல்வம் என்ற வாதத்தை வைத்து கொண்டாலும், அதிமுக அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை பாதுகாக்கவும், சரிபார்ப்பதற்கும் தான் ஓ.பி.எஸ்க்கு அதிகாரம் உண்டு. அதனை எடுத்து செல்வதற்கு அதிகாரம் கிடையாது.
அதிமுக வங்கி கணக்குகள் முடக்கம் செய்யக்கோரி ரிசர்வ் வங்கிக்கு ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதி இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஓ.பி.எஸ் ஐநாவிற்கு கூட கடிதம் எழுதட்டும். அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை என சி.வி.சண்முகம் கூறினார்.
(செய்தியாளர்: ஜெகதீஸ் நடராஜன்)
மேலும் படிக்க: அத்துமீறி நுழைந்த ஓபிஎஸ் - அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ