மக்களே முந்துங்கள்! Co-optex இல் தீபாவளி சிறப்பு விற்பனை: 30% தள்ளுபடி
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி போன்ற முக்கிய பண்டிகையின் போது கோ-ஆப்டெக்ஸ் சிறப்புத் தள்ளுபடிகளை வெளியிட்டு வருகிறது.
தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள பாராம்பரிய கைத்தறி நெசவாளர்களை ஒருங்கிணைக்கும் கூட்டுறவு அமைப்பாகும். இது பெரும்பாலும் கோ-ஆப்டெக்ஸ் என்றே அழைக்கப்படுகிறது. தமிழக அரசின் கைத்தறி, துணிநூல், காதி, கிராமத்தொழில் (ம) கைவினைப் பொருட்கள் துறையினால் இவ்வமைப்பு நிர்வகிக்கப்படுகிறது. இதற்குச் சொந்தமான விற்பனை மையங்கள் தமிழ்நாட்டின் பல ஊர்களில் அமைக்கப்பட்டுள்ளன.
திருமணப் பட்டுப் புடவைகளில் (Sarees Collection) திருமணம் செய்துகொள்ளும் இரட்டையரின் உருவங்கள் நெய்து தரப்படுகின்றன. திருக்குறளும் அதற்கான ஓவியமும் கொண்ட படுக்கை விரிப்புகளும் குழந்தைகளுக்கான ’குட்டீஸ்’ என்ற சிறப்பு வகை படுக்கை விரிப்புகளும் கிடைக்கின்றன. மேலும் பட்டுப்புடவைகளில் பாரம்பரிய வடிவங்கள், இலக்கியக் கதாபாத்திரங்களின் உருவங்கள் போன்றவையும் வாடிக்கையாளரரின் விருப்பத்திற்கேற்றாற் போல உருவாக்கப்படுகின்றன
ALSO READ | சேலையை இப்படியும் விளம்பரப்படுத்த முடியுமா? Super Idea
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி (Diwali 2021) இல்லத்தரசிகளையும், இளம்பெண்களையும் கவரும் வகையில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் 30 சதவீதம் தள்ளுபடி மற்றும் விதவிதமான டிசைன்களை தயாரிக்கப்பட்ட பட்டுப்புடவைகள் மற்றும் கைத்தறி, காட்டன் ஆடைகளை அறிமுகம் செய்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் 200க்கு அதிகமான வெவ்வேறு டிசைன்களில் தயாரிக்கப்பட்ட பட்டு சேலைகள் மற்றும் 250 விதவிதமான டிசைன்களில் தயாரிக்கப்பட்ட கைத்தறி மற்றும் காட்டன் புடவைகளை அறிமுகப்படுத்தி உள்ளது.
பட்டுப்புடவைகள், கைத்தறி மற்றும் காட்டன் புடவைகளுடன் புதிதாக உடல் நலத்திற்கும், சுற்றுச்சுழலுக்கும் தீங்கு விளைவிக்காத ரசாயண உரங்கள் இல்லாமல் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஆர்கானிக் காட்டன் புடவைகளை அறிமுகம் செய்துள்ளோம். மற்ற காட்டன் புடவைகளைப்போல்தான் ஆர்கானிக் புடவைகளும் நெய்யப்படும்.
இந்த நிலையில் தற்போது இந்த ஆண்டு தீபாவளி திருநாள் நெருங்கி வருவதை அடுத்து இந்த ஆண்டும் சிறப்பு 30% தள்ளுபடி செய்ய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதிகபட்சமாக ஒரு சில ரகங்களுக்கு 30% தள்ளுபடி என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனை ரூபாய் 200 கோடி என கோ-ஆப்டெக்ஸ் இலக்கு நிர்ணயித்து உள்ளது. மேலும் புதுவகை மாடல்களில் அதிக வகையான ஜவுளி வகைகளும் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அத்துடன் பிற ஜவுளி ரகங்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடியும் அறிவித்துள்ளது.
ALSO READ | Superwoman: சேலை அணிந்து அசால்டாய் உடற்பயிற்சி சாகசம் செய்யும் டாக்டரின் வைரல் வீடியோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR