கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பல்லுளி பகுதியை சேர்ந்தவர் ரோசி. வயது 66. இவருக்கு உறவினர்கள் என்று சொல்லி கொள்ள யாரும் இல்லாமல் தனிமையில் வாழ்ந்து வருகிறார். ஆரம்பத்தில் வீட்டு வேலைகள் செய்து வந்த இவர் பின்னாட்களில் ஊராட்சி சார்பில் வழங்கக்கூடிய 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலைக்கு சேர்ந்து ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் வேலை செய்து வந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனை பாராட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரோசி பாட்டியை இரண்டு முறை கவுரவித்துள்ளார். ஆனால் 100 நாள் வேலைக்கு செல்லும்போது உடன் பணிபுரிந்தவர்கள் நீ உயிரிழந்தால் உன்னை அடக்கம்  செய்ய யார் இருக்கார்? என கேலி கிண்டல் செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த ரோசி பாட்டி தன்னை அடக்கம் செய்ய தனக்கு தானே கல்லறை கட்ட ஊராட்சி நிர்வாகத்திடன் அனுமதி வாங்கினார். 


அதன்படி சம்பாத்தித்த பணத்தில் தனக்கு தானே அழகான கல்லறை ஒன்றையும் ஆறு ஆண்டுகளுக்கு முன் கட்டினார். இதற்காக 50 ஆயிரம் ரூபாயை அவர் செலவு செய்துள்ளார். அந்த கல்லறையின் பின்புறத்தில் ஒரு வாயில் வைத்து அதன் வழியாக உடலை உள்ளே தள்ளி அடக்கம் செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது. 


மேலும் படிக்க | ''அக்னிபாத்'' திட்டத்தை எதிர்த்து வடமாநிலங்களில் கலவரம் - ரயில்கள், பாஜக அலுவலகத்திற்கு தீ வைப்பு!


இந்த நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட ரோஸி பாட்டி கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். ஆனால் உடனிருந்த கவனிக்க யாரும் இல்லாததால் நோய் முற்றி வீட்டிலேயே நிர்கதியாக சடலமாக கிடந்துள்ளார். ஒருவாரமாக ரோசி பாட்டியின் வீட்டு கதவு திறக்காததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். 


அப்போது அவர் உடல் அழுகிய நிலையில் கேட்பாரற்று கிடந்துள்ளது.இதனை தொடர்ந்து அவர் கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடம் வந்த போலீசார் றோசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இந்த நிலையில் இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவர் கட்டி வைத்திருக்கும் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. சுற்றி இருந்தவர்களின் கேலி கிண்டல்களால் மனம் உடைந்த மூதாட்டி ஒருவர் உயிரோடு இருக்கும் போதே தனக்கு கல்லறை கட்டி காத்திருந்து இறுதியில் கேட்பாரின்றி சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | "SC கையில ஸ்கூல் போக போகுது" பள்ளியில் ஜாதி வெறியை வளர்க்கும் டீச்சர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe