காந்தி நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் நாளை மதுக்கடைகளை மூட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காந்தி ஜெயந்தியான அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடப்பட்டு வருகிறது. இந்நிலையில் காந்தி நினைவு தினமான நாளை ஜனவரி 30 ஆம் தேதியும் மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  


விளவங்கோட்டில் விதிகளை மீறி இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் குறித்து கன்னியாகுமரியை சேர்ந்த ரத்தீஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்,  பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இந்த அவலக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை,  காந்தி நினைவு தினத்திலும் மதுக்கடைகளை மூடப்படுகிறதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 


மனு மீதான விசாரணைக்கு பின்னர்  நாளை ( 30, டிசம்பர்) தமிழகம் முழுவதிலும் டாஸ்மாக் கடைகளை மூத உத்தரவிட்டதோடு, மதுக்கடைகளை மூடியது தொடரபாக பிப்ரவரி 18 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.