விமான விபத்து குறித்து சமூக ஊடகங்களில் பொய்யான கருத்து: ஒருவர் கைது
இந்த விபத்து குறித்து கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு விதமான கருத்துகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
விமான விபத்து குறித்து பொய்யான கருத்துகளை சமூக ஊடகங்களில் பரப்பிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மறைந்த முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் உட்பட 12 பேரை பலிவாங்கிய ஹெலிகாப்டர் விபத்து குறித்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் (Bipin Rawat), அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் புதன்கிழமை பலியாகினர்.
இந்த விபத்து குறித்து கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு விதமான கருத்துகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
இந்நிலையில், முப்படைகளின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் உண்மை நிலை அறியாமல் தேவையில்லாத யூகங்களை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம். விரைவில் விசாரணை முடிந்து உண்மையான காரணம் வெளியிடப்படும் என இந்திய விமானப்படை (Indian Air Force) தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் முப்படை தலைமை தளபதியின் இறப்பின் பின்னணியில் தீவிரவாத இயக்கங்கள் இருப்பதாக பொய் செய்திகளை சமூக வலைதளத்தில் பரப்பியது தொடர்பாக குமரி மாவட்டம் புதுக்கடை பகுதியை சேர்ந்த 24 வயதான ஷிபின் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 153A, 505/1 b, 504 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ALSO READ | LIVE அப்பாவுக்கு இறுதி சடங்குகளை செய்த மகள்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR