ஒருதலை காதல்... காதலியின் நிச்சயத்தை நிறுத்த பாட்டியை கொலை செய்த இளைஞர்!
Cuddalore Crime News: ஒரு தலை காதல் விபரீதத்தால் காதலித்த பெண்ணின் நிச்சயதார்த்தத்தை நிறுத்த பாட்டியை கொலை செய்த இளைஞர் கைது. சோகத்தில் மூழ்கிய குறுக்கத்தஞ்சேரி கிராமம். என்ன நடந்தது? பார்ப்போம்.
Crime News In Tamil: கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே குறுக்கத்தஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி அம்பிகா. 67 வயதாகும் இவருக்கு ஒரு மகள் இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் மூன்று பேருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். அம்பிகாவின் மகன் வீரமணி அதே ஊரில் வசித்து வருகிறார். அம்பிகா தனது மகன் வீரமணி வீட்டில் இருந்து உணவை பெற்றுக்கொண்டு தனது வீட்டுக்கு கொண்டு சென்று தினமும் சாப்பிட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி காலை வீரமணி தனது உறவினர் ஒருவரின் மகள் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காக தாயை அழைத்துச்செல்ல அம்பிகா வீட்டுக்குக்கு சென்றுள்ளார். அப்போது வீடு முழுவதும் புகை மண்டலமாக இருந்துள்ளது. அதோடு வாசல் முழுவதும் ரத்தம் தெறித்திருந்துள்ளது. அந்த சமயத்தில் உள்ளே சென்று பார்த்தபோது அம்பிகாவின் உடல் முழுவதும் எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து மகன் கருவேப்பிலங்குறிச்சி காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அவரின் தகவல் அடிப்படையில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் அம்பிகாவை கொலை செய்து யாரோ எரித்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் சிலரை அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த வெற்றிவேல் என்ற இளைஞர் இந்த கொலையை செய்தது அம்பலமானது.
மேலும் படிக்க - ராமஜெயம் கொலை வழக்கு: விசாரணை சென்று வந்த நபர் வெட்டிப்படுகொலை! நடந்தது என்ன?
வெற்றிவேல் கொல்லப்பட்ட அம்பிகாவின் நெருங்கிய உறவினரின் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவரை பெண் கேட்டும் சென்றுள்ளார். அப்பொழுது அம்பிகா மற்றும் அவரது மகன்கள் இந்த திருமணத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதோடு அந்த பெண்ணுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்தத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சூழலில் தான், அந்த பெண்ணின் நிச்சயதார்த்தத்தை நிறுத்த அம்பிகாவை வெற்றிவேல் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். நெருங்கிய உறவினர் இறந்தால் சுப நிகழ்ச்சி தடைபடும் என்பதால் இப்படி செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த அம்பிகாவை கடந்த 9 ஆம் தேதி இரவு வெற்றிவேல் மது போதையில் மூதாட்டி அம்பிகா வீட்டிற்கு சென்று அங்கு தனியாக இருந்த அவரை அடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் மூதாட்டியின் உடலை வீட்டில் இருந்த புடவை, பொருட்களோடு வைத்து எரித்துள்ளார்.
இந்த கொலை சம்பவத்தோ அடுத்து போலீசார் வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். ஒருதலை காதலால் இளைஞர் மூதாட்டியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க - மாமியாரை வெட்டி கொலை செய்த மருமகள்! அதிர்ச்சிப் பின்னணி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ