கொரோனா காலத்தில் நாம் பல விதமான புதுமைகளையும் வினோதங்களையும் கண்டு வருகிறோம். நாம் நினைத்துக்கூட பார்க்காதவை நடந்துகொண்டிருக்கின்றன. நமது வாழ்க்கை முறையையே இந்தத் தொற்று மாற்றியுள்ளது. வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் நாம் இக்காலத்தில் மாற்றத்தைக் கண்டுள்ளோம். நமது தினசரி வழக்கங்கள், பணி புரியும் விதம், கல்வி கற்கும் விதம், போக்குவரத்து, பயணிக்கும் முறை என அனைத்தும் மாறி விட்டன. நமது வாழ்க்கையில் இன்றியமையாதவையாக இருந்த பலவற்றை இப்போது தவிர்த்து வாழ்கிறோம். புதிய பழக்கங்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவ்வகையில், பெரிய அளவிலான மாற்றத்தைக் கண்டுள்ள அம்சங்களில் நமது கல்வி அமைப்பும் ஒன்றாகும்.


ALSO READ: பல்கலை. இறுதிப் பருவ தேர்வுகளை ரத்து செய்து அனைவருக்கும் தேர்ச்சி வழங்குக- PMK


தமிழ் நாடு (TN) அரசு பள்ளி (Government School) மாணவர்களுக்கு, ஜூலை 13 -க்குப் பிறகு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் (Minister Sengottaiyan) கூறியுள்ளார். மேலும், ஐந்து தனியார் தொலைக்காட்சி சேனல்கள் வகுப்புகளை இலவசமாக ஒளிபரப்ப ஒப்புக்கொண்டுள்ளன என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.


ஏற்கனவே பல தனியார் பள்ளிகளும் பல கல்லூரிகளும் ஆன்லைன் முறையில் வகுப்புகளை (Online classes) துவக்கிவிட்டன. இடைத் தேர்வுகளும் ஆன்லைன் முறையில் நடந்துகொண்டிருக்கின்றன.


மாணவர்களின் நேரம் வீணாகாமல் இருக்க பள்ளிகளின் சர்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஆசிரியர்களும் இந்த புதிய முறைக்கு தங்களை பழக்கப்படுத்திக்கொண்டு மாணவர்களுக்கு கல்வி புகட்டி வருகின்றன.


கல்வி என்றாலே நம் நினைவில் வருவது கல்விக்கூடங்களான பள்ளிகளும் அங்கு கல்வி கற்க ஆர்வத்துடன் கூடும் மாணவ மாணவிகளும்தான். ஆனால், இந்த கொரோனா காலம் அதையும் மாற்றி விட்டது.


பள்ளிகள் திறக்க முடியாத நிலையில் மாணவர்கள் (students) தங்கள் வீடுகளிலிருந்தே ஆன்லைனில் கல்வி கற்று வருகிறார்கள்.