அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓபிஎஸ் நீக்கம்
அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா உத்தரவிட்டுள்ளார். பன்னீர்செல்வத்திற்கு பதிலாக அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா உத்தரவிட்டுள்ளார். பன்னீர்செல்வத்திற்கு பதிலாக அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக ஓ. பன்னீர்செல்வத்தின் அதிரடியான பேட்டியை தொடர்ந்து போயஸ் கார்டனில் அமைச்சர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு ஓ. பன்னீர்செல்வம் பொருளாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கட்சிக்கு எதிரான கருத்தை தெரிவித்ததால் இந்த நடிவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.