MBBS, BDS படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை நாளை (வெள்ளி) முதல் துவங்கும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான NEET தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியுள்ள நிலையில் NEET தேர்வில் அடிப்படையில் தகுதி பெறக்கூடிய தமிழக மாணவர்கள், MBBS, BDS சேர்க்கைக்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டும். 


கடந்த ஆண்டு வரை அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் மூலமாகவும், ஆன்லைன் வழியாகவும் மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர். இந்த ஆண்டு முதல் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்த ஆண்டு நிலவரப்படி, MBBS படிப்பில், மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 3,328-ம், BDS மருத்துவ படிப்பில் 1,198 இடங்களும் உள்ளன. 


இந்த ஆண்டு கரூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கரூர் அரசு மருத்துவ கல்லூரியில் 150 MBBS இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. அதேப்போல், நெல்லை மருத்துவ கல்லூரிக்கு கூடுதலாக 100 இடங்கள் அளிக்கப்பட்டுள்ளது. 


மதுரை அரசு கல்லூரியிலும் கூடுதலாக 100 இடங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிகழாண்டில் சுமார் 350 இடங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளது.