OPS on Tamil New Year: தவறான எண்ணத்தில் நிலைத்திருப்பதை விட கருத்தை மாற்றுவது நல்லது
தை மாதம் முதல் நாளே தமிழ் புத்தாண்டு என்பது மக்கள் மீது திணிக்கப்பட்ட சட்டம் , தவறான எண்ணத்தில் நிலைத்திருப்பதை விட கருத்தை மாற்றிக் கொள்வது நல்லது என AIADKK ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கருத்து
சென்னை: மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து "சித்திரை 1 தமிழ் புத்தாண்டாக" தொடர, மாண்புமிகு முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுகவின் மூத்தத் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தை மாதம் முதல் நாளே தமிழ் புத்தாண்டு என்பது மக்கள் மீது திணிக்கப்பட்ட சட்டம் என்று கூறும் அவர், தவறான எண்ணத்தில் நிலைத்திருப்பதை விட கருத்தை மாற்றிக் கொள்வது நல்லது என்று தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக வழக்கம் போல இந்த ஆண்டும் தமிழக அரசு, பொங்கல் பரிசு பை கொடுக்க உள்ளது. ரேஷன் கடைகள் வாயிலாக விநியோகிக்கப்படும் பொங்கல் பரிசுக்கான துணி பை வடிவமைக்கப்பட்டு, அதன் மாதிரியை அரசு வெளியிட்டிருந்தது. அதில்,'தமிழ் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துக்கள்' என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
இது, கடந்த 2011ல், 'ஏப்ரல் 14ல் தான் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும்' என, அப்போதைய அ.தி.மு.க. அரசு அறிவித்ததற்கு மாறாக இருக்கிறது. ஆனால் இதுவரை, அதிமுகவின் அறிவிப்புக்கு மாற்றாக, மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு (Tamil Nadu Government) அறிவிக்கை எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் மாதம் வரும் சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக உலகம் முழுதும் வாழும் தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர். அனைத்து தமிழர்களுமே தமிழ் புத்தாண்டை நல்ல காரியங்கள், தொழில் துவங்குவதற்கு ஏற்ற நாளாக கருதி, கொண்டாடுவது வழக்கம்.
சித்திரை மாத பிறப்பு தமிழரின் மரபார்ந்த புத்தாண்டு அல்ல என்ற மாற்றுக்கருத்து தமிழ்நாட்டில் 1970, 80களில் தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கது. தை முதலாம் தேதியில் துவங்கியதும், தமிழரின் ஆண்டுத் தொடராக முன்வைக்கப்பட்டதுமான திருவள்ளுவர் ஆண்டு என்பதன் அடிப்படையில், தை மாதம் முதல் நாளை, தமிழ் புத்தாண்டாக (Tamil New Year) 1981ஆம் ஆண்டு மதுரை உலகத்தமிழ் மாநாட்டின் ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டது.
இந்தப் பின்னணியில், தை முதல்நாள்தான் புத்தாண்டு என்று, முந்தைய திமுக அரசு திமுக அரசால் 2008 தை மாதம் 23 ஆம் நாள் ஆண்டு அரசாணை பிறப்பித்தது. இந்த ஆணையை 2011ஆம் ஆண்டில் அதிமுக அரசால் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சித்திரை முதல் நாள் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் அடிப்படையில் தான் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
ALSO READ | தை முதல் நாளை புத்தாண்டாக அறிவிக்கிறதா அரசு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR