புது டெல்லி: 17-ஆம் மக்களவை தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இன்று மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றார். அவருடன் மத்திய அமைச்சரவையில் இடம் பெரும் அமைச்சர்களும் பதவி ஏற்று வருகின்றனர். இத்தகு முன்தாக யார்? யாருக்கு? அமைச்சரவையில் இடம் ஒதுக்க வேண்டும் என்பது குறித்து மோடி மற்றும் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

542 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350-க்கு அதிகமான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது பாஜக. இந்தியா முழுவதும் மோடி அலை வீசினாலும், தமிழகத்தை பொருத்த வரை திமுக அலை தான் வீசியது என்று தான் கூற வேண்டும்.


தமிழகம் மற்றும் புதுசேரி மாநிலத்தில் 39 தொகுதிக்கு நடைபெற்ற லோக் சபா தேர்தலில் 38 இடங்களை திமுக கூட்டணி வென்றுள்ளது. பாஜக - அதிமுக கூட்டணி வெறும் ஒரே இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. அதிலும் பாஜக தான் போட்டியிட்ட ஐந்து இடங்களிலும் தோல்வியை சந்தித்தது. அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் தேனி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றார்.


தற்போது பாஜக - அதிமுக கூட்டணி வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் என்பதால், அவரை எப்படியாவது அமைச்சராக்கி விட வேண்டும் என தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பல முயற்ச்சிகளை எடுத்து வந்தார். அதற்கான பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்களை சந்தித்து பேசினார். எப்படியாவது தனது மகனை அமைச்சராக்கி விட வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து ஓபிஎஸ் வேலை செய்து வந்தார். 


மகனுக்காக ஓ.பன்னீர்செல்வம் எடுத்த முயற்ச்சிகள் அனைத்தும் பலனை தந்துள்ளது. ஆம், தேனி தொகுதியில் வெற்றி பெற்ற ஒரே அதிமுக வேட்பாளர் ஓ.பி. ரவீந்திரநாத் குமாருக்கு பாஜக தலைமை கேபினட் பதவி கொடுத்துள்ளது என டெல்லி பாஜக வட்டாரம் தெரிவித்தது.