ஓ.பி.எஸ் போராட்டம் ஆகஸ்ட் 18 -க்கு ஒத்திவைப்பு!
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் மீதான எதிர்ப்பை ஆர்ப்பாட்டத்தின் மூலம் காட்டுவது என ஓ.பன்னீர்செல்வம் அணியினர் முடிவெடுத்துள்ளனர்.
குடிநீர் தட்டுப்பாடு, டெங்கு காய்ச்சல், நீட் தேர்வு, விவசாயிகள் பிரச்சினை, மாநகராட்சி நிர்வாக சீர்கேடு போன்ற பல்வேறு மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து, வரும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 10) சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நடக்கவிருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாகவே போலீஸ்ல் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், இதுதொடர்பாக எந்தவொரு பதிலும் வராத நிலையில், நேற்று மீண்டும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
ஆனால், சுதந்திர தினத்தை காரணம் காட்டி, போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். மேலும் சுதந்திர தினத்திற்கு ஒரு வாரம் முன்பு எந்தவொரு போராட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்பட மாட்டது என போலீசார் விளக்கமளித்துள்ளனர்.
எனவே, வியாழக்கிழமை (ஆகஸ்ட் 10) அன்று நடக்க இருந்த போராட்டம் சுதந்திர தினத்திற்கு பின் ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்க பட்டுள்ளது.