ஓ.பன்னீர்செல்வம் மே 5-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஞ்சிபுரத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்கும் அவர் கன்னியாகுமரியில் பயணத்தை முடிக்கிறார் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியின் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். 


அதிமுகவில் பிளவுபட்டுள்ள இரு அணிகள் இணைப்பு முயற்சிக்கான பேச்சுவார்த்தை ஆரம்பித்த இடத்திலேயே நிற்கிறது. இரு அணியினரும் மாறு பட்ட கருத்துக்களை கூறி வருவதால் பேச்சுவார்த்தைக்கு இணக்கமான சூழல் உருவாகவில்லை. 


அணிகள் இணைப்புக்கான சாத்தியம் தற்போது இல்லாத சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை மே 5-ம் தேதி முதல் தொடங்கப் போகிறார். மாநிலம் முழுவதும் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சந்திக்கப் போகிறார் ஓ.பன்னீர்செல்வம்.