தமிழ்நாட்டில் சிக்கித் தவிக்கும் கேரள மக்களை மீட்டெடுக்கும் முயற்சியில் தன்னார்வலர்களின் ஒரு அமைப்பு செயல்பட்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அகில இந்திய கேரள முஸ்லீம் கலாச்சார மையம் (AIKMCC) என அறியப்படும் இந்த அமைப்பு ஏற்பாடு செய்த போக்குவரத்து மூலம் இதுவரை 150 கேரளவாசிகள் (பெரும்பாலும் மாணவர்கள்) திருச்சியில் இருந்து கேரளா அழைத்துச்செல்லப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.


மேலும் வீடு திரும்பியவர்கள் தமிழ்நாட்டிலுள்ள மலையாளர்களிடையே AIKMCC இன் ஒருங்கிணைப்பாளர்களின் தொடர்பு விவரங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். பல மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கேரளாவிற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து அறிய AIKMCC ஒருங்கிணைப்பாளர்களை அழைப்பதாக அமைப்பின் உறுப்பினர் தெரிவிக்கிறார்.


யார் கேரளா செல்ல விரும்புகிறார்களோ அவர்களுக்கான பயண ஏற்பாடுகளை நாங்கள் செய்து கொடுக்கிறோம். இதை மே 1-ஆம் தேதி தொடங்கி நடைமுறைப்படுத்தி வருகிறோம். எங்கள் விவரங்களை இணையதளத்தில் வைத்துள்ளோம். இந்த தகவலை பார்த்து மக்கள் எங்களை அழைக்கத் தொடங்கினர், கேரளா மற்றும் தமிழக அரசுகளிடமிருந்து இ-பாஸ் பெறுவதற்கான முறைகளை நாங்கள் விளக்கினோம். ஆன்லைன் பயன்பாடுகளுடன் அறிமுகமில்லாதவர்களுக்கு எங்கள் தொண்டர்கள் உதவுவார்கள். இரு மாநிலங்களிலிருந்தும் அவர்கள் பாஸ் பெற்றவுடன், நாங்கள் பயண ஏற்பாடு செய்வோம். பயணிகள் போக்குவரத்துக் கட்டணத்தை மட்டுமே செலுத்த வேண்டும் என்று திருச்சியின் AIKMCC ஒருங்கிணைப்பாளர் முகமது சாகீர் கூறுகிறார்.


பயணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து, AIKMCC அவர்களுக்கு பஸ் அல்லது காரை ஏற்பாடு செய்யும். "ஒரு பஸ்ஸில் சுமார் 25 பயணிகள் மற்றும் காரில் 4 பயணிகள் வரை பயணம் மேற்கொள்ளலாம்.


செலவு பயணிகளால் பகிரப்படும். ஒவ்வொரு பயணிகளும் பாஸுடன் வாகனத்திற்குள் நுழைவதை உறுதி செய்வோம். இது தவிர, பயணிகளுக்கு உணவு, கையுறைகள் மற்றும் முகமூடியை நாங்கள் வழங்குகிறோம், என்று சாகீர் மேலும் குறிப்பிடுகின்றார்.


இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்குடன் இணைந்திருக்கும் மேற்கொண்ட AIKMCC முயற்சிகளையும் பல பயணிகள் பாராட்டி வருகின்றனர்.


இதனிடையே கேரளாவில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் திரும்பி வரவும் AIKMCC உதவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.