தமிழகத்தில் 7 மாவட்டங்களில் நேற்று 100 டிகிரிக்கும் மேல் வெயில் தாண்டியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 3 டிகிரிக்கும் மேல் வெப்பம் அதிகரித்து, 7 மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்தது. 


அதிகப்பட்சமாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 104.1 டிகிரி, அடுத்தப்படியாக சேலத்தில் 102.7 டிகிரி, வேலூர் மற்றும் மதுரையில் 102.5 டிகிரி, கரூர் மாவட்டம் பரமத்தியில் 102.2 டிகிரி, தர்மபுரியில் 101.4 டிகிரி, திருச்சியில் 101.3 டிகிரி வெப்பம் பதிவாகி உள்ளது. 


இந்நிலையில், தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. உள் தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் எனவும், இன்று மற்றும் நாளை கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அனல் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.