பொருளாதார இருளில் இருந்து நாட்டை மீட்டெடுக்க மத்திய அரசின் திட்டம் என்ன? ப.சி ட்விட்
இந்திய பொருளாதாரத்தின் நிலை மிகவும் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. பொருளாதார சரிவில் இருந்து மீள அரசின் திட்டம் என்ன? என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி: இந்திய பொருளாதாரத்தின் நிலை மிகவும் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. பொருளாதார சரிவில் இருந்து மீள அரசின் திட்டம் என்ன? என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா தொலைக்காட்சி நிறுவனம் அந்நிய முதலீடு பெற்றதில் விதிகள் மீறப்பட்டதாகவும், அதற்கு அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு தொடுத்து விசாரணை நடத்தி வந்தது. கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி அவரின் முன்ஜாமீன் மனு தள்ளுப்படி ஆனதால், அன்று இரவே டெல்லியில் உள்ள தனது வீட்டில் ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரியால் கைது செய்யப்பட்டார்.
15 நாட்கள் சிபிஐ காவலில் இருந்த ப.சிதம்பரம் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தப்பட்டார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19 வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிற்பித்தார். இதனையடுத்து தற்போது ப.சிதம்பரம் டெல்லியில் உள்ள திஹார் சிறையில் உள்ளார்.
அவர் சிறையில் இருப்பதால், எனது சார்பாக ட்வீட் செய்ய எனது குடும்பத்தினரை நான் கேட்டுக்கொண்டேன். அவர்கள் எனது சார்பாக எனது கருத்தை பதிவிட்டு வருகிறார் எனத் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில்,
எனது சார்பாக ட்வீட் செய்ய எனது குடும்பத்தினரை நான் கேட்டுக்கொண்டேன்,
உங்கள் ஆதரவுக்கு அனைவருக்கும் நன்றி. நீதி மற்றும் அநீதியை வேறுபடுத்திப் பார்க்க ஏழைகளின் திறனைக் கண்டு நான் வியப்படைகிறேன் (கடந்த சில நாட்களாக சந்திக்கவும் உரையாடவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது).
நான் நாட்டின் பொருளாதாரம் குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளேன்.
பொருளாதார சரிவால் ஏழைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குறைந்த வருமானம், வேலையிழப்புகள், குறைந்த வர்த்தகம் மற்றும் குறைந்த முதலீடு போன்ற காரணங்கள் ஏழைகளையும், நடுத்தர மக்களையும் பாதிக்கின்றன. இந்த சரிவு மற்றும் இருளில் இருந்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசிடம் உள்ள திட்டம் என்ன? என்று ப.சிதம்பரம் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.