தூத்துக்குடியில் உள்ள குளத்தூரில் வசிக்கும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களான சோலைராஜ் (வயது 23) மற்றும் ஜோதி (வயது 20) இருவரும் காதலித்து ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டனர். இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், நேற்று அதிகாலை சோலைராஜ் மற்றும் ஜோதி தம்பதியினர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுக்குறித்து விசாரணை மேற்கொண்டதில் ஜோதியின் தந்தை மற்றும் அவரது உறவினர்களே, தம்பதியரை ஆணவப் படுகொலையை செய்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தமிழகத்தில் கடந்த 10 தினங்களில் நிகழும் 3வது ஆணவக் கொலையாகும். இந்த சம்பவத்திற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில், இதைக் கண்டித்து இயக்குநர் பா. ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், "கடந்த பத்து தினங்களில் மேட்டுப்பாளையம் கனகராஜ் - வர்ஷினி பிரியா, திருச்சி பாலக்கரை பசுமடம் சத்தியநாராயணன், இவர்களை தொடர்ந்து தூத்துகுடி(மா)குளத்தூர் சமத்துவபுரத்தில், சாதிமறுப்புதிருமணம் செய்த சோலைராஜா - ஜோதி படுகொலை. நாம் தமிழர்! நாம் இந்து! நாம் திராவிடர்! இல்லை நாம் ஜாதி வெறியர்கள்.


படுகொலை செய்யப்பட்ட #சோலைராஜா_ஜோதி  இருவரும் பட்டியல் இனத்தை சார்ந்தவர்கள். சுயசாதி பற்று இருக்கும் பட்டிலினத்தவர்களே! *விதைத்தவர்கள் அறுவடை செய்துகொண்டு இருக்கிறார்கள்! செய்வார்கள்!* சுய சாதி பற்று இன்னும் பல கொடூரத்தை செய்ய காத்துகொண்டிருக்கிறது. விழித்து கொள்வோமா?


வழக்கம் போல் தமிழகஅரசு “தமிழகத்தில் ஆணவ கொலை நடக்கவே இல்லை” என்று அறிவிக்கும்! “யாருங்க இப்போல்லாம் ஜாதி பாக்குறாங்க?”ஒரு கூட்டம் பேசிகிட்டு இருக்கும்! “இவனுங்கதான் ஜாதியத்தை பேசிபேசி வளக்குறாங்க” என்று சொல்லுவார்கள் சிலர்! வழக்கம் போல் கொலைகள் மறக்கப்படும்! மற்றும் ஒன்று நிகழும்!


இவ்வாறு கூறியுள்ளார்.