பொறி பறக்கும் பாலமேடு ஜல்லிக்கட்டு..! திமிரும் காளைகள்.. சீறும் காளையர்கள்
உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுப்போட்டி ஆரவாரத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தைப்பொங்கலுக்கு தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப்பிரசித்தி பெற்றவை. பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண்பதற்கு உலகின் பல்வேறு மூளைகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா காரணமாக பார்வையாளர்களுக்கு குறைந்த அளவில் அனுமதி வழங்கப்பட்டாலும், ஆரவாரத்துக்கு பஞ்சமில்லாமல் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறன்றன.
நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று பாலமேட்டில் களைகட்டியுள்ளது. சுமார் 700 காளைகளும், 300க்கும் மேற்பட்ட காளையர்களும் இதில் களமிறங்க உள்ளனர். பல்வேறு சுற்றுகளாக நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை, வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் இன்று காலை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
ALSO READ | ஜல்லிக்கட்டு; வேடிக்கை பார்க்கச் சென்ற இளைஞர் மாடு முட்டி உயிரிழப்பு
முதல் காளையாக கோயில் காளை சீறிப்பாய்ந்து வந்தது. பின்னர், அவிழ்த்துவிடப்பட்ட காளைகளை களத்தில் இருந்த காளையர்கள் போட்டி போட்டு அடக்கினர். காளைகளை அடக்கும் காளையர்களுக்கு தங்கக்காசு, குக்கர், சைக்கிள், இருசக்கர வாகனம் உள்ளிட்ட பரிசுகள் கிடைக்கும். முதல் பரிசு வெல்பவருக்கு காரும், சிறந்த காளைக்கு காங்கேயம் பசுமாடும் பரிசாக வழங்கப்பட உள்ளது. மாலை 4 மணியுடன் இந்த ஜல்லிக்கட்டு நிறைவடைய உள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR