சேலம் மாவட்டம், எடப்பாடி, சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் செய்து முடிக்கப்பட்ட திட்ட பணிகளை துவக்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்டினார் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. வேம்பனேரியில் அவர் பொதுமக்களிடையே சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, ஆரம்பத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் வழிநடத்திய கட்சிக்கு பொதுச்செயலாளராக ஆகும் வாய்ப்பு இந்த மண்ணை சேர்ந்த ஒருவருக்கு கிடைத்துள்ளதற்கு பெருமை என்றார். தொடர்ந்து பேசிய அவர், நாள் ஒன்றுக்கு 3000 லாரிகள் மூலம் விவசாயிகள் வண்டல் மண் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கினோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சிறையில் இருந்து வெளிவந்த 5 மணி நேரத்தில் சென்னையில் நடந்த கொலை: பின்னணி இதுதான்


இந்திய அளவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 11 மருத்துவக் கல்லூரி ஒரே ஆண்டில் கொண்டு வந்தோம். மூன்று கால்நடை கல்லூரி, ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா இவை எல்லாம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்றார். ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் அதனை கிடப்பில் போட்டுவிட்டனர். அதனை நிறைவேற்றி இருந்தால் விவசாயிகள் மிகப்பெரிய அளவில் பலனடைந்து இருப்பார்கள். விவசாயிகளுக்கு எந்தெந்த வகையில் நன்மை செய்ய முடியுமோ அந்த வகையில் நன்மை செய்தது அதிமுக அரசு. நெசவாளர்களுக்கு மானிய விலையில் மின்சாரம் தந்தோம்.


சட்டமன்றத்தில் திறமையான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர் குலைந்து விட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெறுவதால் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முதலமைச்சரால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியவில்லை. செந்தில் பாலாஜியை கைது செய்தபோது மத்திய அரசு பழி வாங்குவதாக ஸ்டாலின் கூறுகிறார். செந்தில் பாலாஜி அதிமுகவில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, அவர் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தர பணம் வாங்கியதாக ஸ்டாலின் தான் முதன்முதலில் ஊழல் குற்றச்சாட்டு கூறினார்.


இன்று அதே செந்தில் பாலாஜியை மத்திய அரசு பழி வாங்குவதாக கூறுகிறார். நீதிமன்ற உத்தரவுபடி தான் அமலாக்கத்துறை அவரை கைது செய்துள்ளது. செந்தில் பாலாஜி கலால் துறையில் 20 ஆயிரம் கோடி கொள்ளை அடித்துள்ளார். முதலமைச்சரும், அமைச்சர்களும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள செந்தில்பாலாஜியை சென்று பார்க்கின்றனர். கட்சிக்காக உழைத்த துரைமுருகனை யாரும் மருத்துவமனையில் சென்று பார்க்கவில்லை. ஐந்து கட்சிகளுக்கு சென்று வந்த செந்தில் பாலாஜிக்கு இவ்வளவு முக்கியத்துவம் தருகின்றனர். செந்தில் பாலாஜி கொள்ளை அடித்த பணத்தில் பெரும் பகுதி ஸ்டாலினுக்கு போய் உள்ளதால் அப்படி நடந்து கொள்வதாக குற்றம் சாட்டினார்.


மேலும் படிக்க | சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ