விருதுநகரில் இரயில் நிலைய புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் "தமிழ்நாட்டு மக்கள் ஒன்றிய பாஜக அரசுக்கு மீண்டும் பூஜ்யத்தை தருவார்கள்" என்றார். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் விருதுநகர் ரயில் நிலைய புனரமைப்பு பணிகளுக்காக ரூபாய் 25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம்  முதல் இதற்கான பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் " ஆய்வு செய்தார்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது, விருதுநகர் இரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை ஆய்வு  செய்தேன்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க - INDIA கூட்டணியில் இருந்து விலகிய காரணம்... ராகுல் காந்தி செய்த அந்த காரியம் - நிதிஷ் குமார் தடாலடி!


இதில் முதற்கட்டமாக 8.61கோடிக்கு பணிகள் நடைபெறுகிறது. அதில்,  2வது, 3வது நடைமேடை பணிகள், ரயில்வே நிலையத்தின் முகப்பு மற்றும் நுழைவு வாயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.  கடந்த 70 ஆண்டுகளாக தமிழக ஆளுநராக இருந்தவர்களில் ஆர்.என்.ரவி வித்தியாசமாக செயல்படுகிறார். அரசியல் உள்நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார். அரசியல் சாசனத்தை மீறி செயல்படுகிறார். மேதகு ஆளுநர் என்ற மரியாதையை குறைப்பதாக அவரது செயல்பாடு உள்ளது. இந்தியாவின் ஜனநாயாகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட  அரசு என்ன திட்டங்களை செயல்படுத்துகிறதோ  அதை அறிவிக்க வேண்டிய ஆளுநர் புறக்கணிப்பது சரியல்ல. அவர் விரைவில் ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது குடியரசுத் தலைவர் அவரைத் திரும்ப பெற வேண்டும். 


தமிழகத்திற்கு எதிரான மனநிலை கொண்டவரை ஆளுநராக மோடி அரசு நியமித்துள்ளது. ஜே.பி நட்டா எய்ம்ஸ் கட்டிடப் பணி 90 சதவீதம் நிறைவடைந்து விட்டது என கூறினார். அண்ணாமலை அவரை  கேவலப்படுத்தவதற்காக எழுதி கொடுத்துள்ளார். அதை அவர் படித்து விட்டார்.  நானும் வெங்கடேசன் எம்பியும் சென்று பார்த்தோம். அங்கு 2 செங்கல் தான் இருந்தது. முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தியை பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் விமர்சித்துள்ளார் அது கண்டணத்திற்குரியது.  தான் 10 ஆண்டுகளில் என்ன செய்தோம் என  மக்களிடம் கூறுவதற்கு  வக்கற்றவராக இருந்து கொண்டுள்ளார். 
அதானிக்கு மட்டும் உழைப்பவராக மோடி மாறியுள்ளார். 2014ல் 616வது இடத்தில் இருந்தவரை முதலாவது பணக்காராக உயர்த்தியுள்ளார். 


இந்தியாவினுடைய மொத்த சொத்துக்களையும் அதானி பெயரில் எழுதிவைப்பதை மட்டுமே பணியாக பார்த்து வருகிறார். இதை திசை திருப்புவதற்காகவே தேசியத் தலைவர்களை விமர்சிக்கிறார். திமுகவுடன் எத்தனை இடங்கள் என பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்தியா கூட்டணி தமிழகத்தில் பலமாக உள்ளது.40க்கு 40 இடங்களையும் வெல்வோம்.  இந்தியா கூட்டணியல் பல திறமையான தலைவர்கள் உள்ளனர். எனவே, தேர்தலுக்கு முன்னாள் பிரதமர் யார் என அறிவிப்பார்கள். ஒன்றிய அரசுக்கு பாஜக காரர்கள் வீட்டிலிருந்து நிதி செல்லவில்லை. விருதுநகர் மாவட்டத்தில் இருந்து பட்டாசு, தீப்பெட்டி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் மூலம் நிதி கிடைக்கிறது. குறிப்பாக வருமான வரி அதிகமாக ஒன்றிய அரசுக்கு செல்கிறது. எனவே, அதற்கான உரிமையை கேட்கிறோம். மதுரை எய்ம்ஸ், விருதுநகரில் ஜவுளிப் பூங்கா உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களுக்காக தொடர்ந்து போராடுவோம் என்றார். 


மற்றவர்கள் கொண்டு வந்த திட்டத்தை தாங்கள் கொண்டு வந்ததாக கூறுவதில் கைதேர்ந்தவர்கள். ஸ்டிக்கர், போஸ்டர் ஒட்டுவது பாஜகவினரின் மரபணுவோடு சேர்ந்துள்ளது. இடி. சிபிஐ யை நம்பித்தான் மோடியும் , நட்டாவும் உள்ளனர். மக்களை நம்பி இல்லை. இவை இரண்டையும்  வைத்து தமிழகத்தில் திமுக வையும் பிற மாநிலங்களில் காங்கிரஸ்  அமைச்சர்களை மிரட்டி பொய் வழக்கு போட்டு கட்டுக்குள் கொண்டு வர மயற்சி செய்கின்றன. அதை எதிர்த்து உறுதியுடன் போராடி வருகிறோம். தமிழக மக்கள் பாஜகவுக்கு மீண்டும் பூஜ்யத்தை தருவார்கள் என்று அவர் கூறினார்.


மேலும் படிக்க | ஆளுநர் என்ட்ரி முதல் எக்ஸிட் வரை... சட்டப்பேரவையில் நடந்தது என்ன? - தலைவர்களின் ரியோக்சன்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ