தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வருவோம் என தெரிவித்த அரசியல் கட்சி தலைவர்கள் எல்லாம் தற்போது நிலையில் உள்ளார்கள் என நாம் தமிழக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார் 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான அணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளும், அதிமுக தலைமையிலான அணியில் பாஜக, பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளும் இணைந்து போட்டியிடுகின்றன.


இந்த இரு அணிகளுக்குள்ளும் தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்ட தேர்தலை எதிர்கொள்வதற்கான அனைத்து செயற்பாடுகளும் மும்முரமாக நடைப்பெற்று வருகிறது.


மறுபுறம் யாருடனும் கூட்டணி அமைக்கப்போவதில்லை என கூறி தமிழகம் - புதுவை உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தனித்து களம் காண தயாராகவுள்ளது சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி. 


நாற்பது தொகுதிகளில் சரிபாதியாக ஆண் - பெண் வேட்பாளர்களை களமிறக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த காலங்களில் மாற்றம், முன்னேற்றம் என பேசியவர்கள் எந்த கட்சியை ஆட்சி - அதிகாரத்திலிருந்து மாற்ற வேண்டுமோ அந்த கட்சிக்கே துணை நிற்கிறார்கள் என மக்களே அறிவார்கள் என கடுமையாக விமர்சித்துள்ளார்.