தனது உயிர் பிறிவதற்கு முன்னர் 7 பேர் விடுதலை குறித்தான ஆவணத்தில் ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாய் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசு கடந்த ஆண்டு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது.



எனினும் இதுவரை இந்த இந்த தீர்மானம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தனது ட்விட்டர் பக்கத்தில் “அமைச்சரவை பரிந்துரைத்து ஓராண்டு நிறைவு பெறுகிறது. 29 வருட அநீதியில் உள்ள பங்கு ஒன்றுடன் முடியட்டும், என் உயிர் இருக்கும்போதே கோப்பில் மை படட்டும்” என உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


7 பேர் விடுதலை குறித்த தீர்மான நிறைவேற்றி ஓராண்டு ஆவதை குறிப்பிடும் வகையில் இந்த ட்விட்டர் பதிவு அமைந்துள்ளது. 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் தனது மகன் பேரறிவாளனின் விடுதலைக்காக அற்புதம்மாள் தொடர்ந்து போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.