முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைதண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் பரோல் விடுப்பு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த நீட்டிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் மருத்துவ சிகிச்சைக்காக பரோல் விடுப்பில் உள்ளார். பரோலில் இருக்கும் பேரறிவாளன், சில நாட்களுக்கு முன்னதாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.


ஜாமின் கோரிய தனது  வழக்கை 3 வாரத்துக்கு ஒத்திவைக்குமாறு பேரறிவாளன் தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டதை தொடரந்து கடந்த வாரம், உச்ச நீதிமன்றம் அவரது ஜாமீன் வழக்கை ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.  


Also Read | புழல் சிறையில் இருந்து 30 நாள் ஜாமீனில் பேரறிவாளன் விடுவிப்பு


ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறை கைதியாக உள்ள பேரறிவாளன் நீரிழிவு (Diabetes) மற்றும் சிறுநீரக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்குத் கொரோனா (Corona) தொற்று எளிதில் பரவும் அபாயம் உள்ளததாக கூறப்பட்டது.


பேரறிவாளன் உடல் நிலையைக் கருத்தில் கொண்டும், கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டும் அவருக்கு நீண்ட விடுப்பு வழங்கிட வேண்டும் என, பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் 2021,மே 18 அன்று தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் (M.K.Stalin) கோரிக்கை விடுத்திருந்தார்.


இந்த கோரிக்கையை பரிசீலித்த  தமிழக அரசு, கடந்த 19ம் தேதி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனையை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு அளித்து, உத்தரவிட்டது. தற்போது பரோல் விடுப்பு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


Also Read | PMK: 2021 - 2022ஆம் ஆண்டின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR