ஜல்லிக்கட்டு போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசிய ராதா ராஜன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக முழுவது ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் என மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். சென்னை மெரினா கடற்கரையில் கடந்த ஏழு நாட்களாக மிகப் பெரிய போராட்டம் நடந்து வருகிறது. அங்கு லட்சக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். மழை, வெயில் என பாராமல் ஆண்கள் பெண்கள் என அனைவரும் தொடர் போராட்டத்தில் பங்கேற்றனர். 


இந்நிலையில் மெரினாவில் நடந்து வரும் போராட்டம் குறித்து பீட்டா ஆதரவாளரான ராதா ராஜன் கூறியதாவது:-  'ஃப்ரிசெக்ஸ் என்று சொன்னால் கூட மெரினாவில் 5000 பேர் கூடுவார்கள்' என மாணவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும்விதமாக பேசியிருந்தார். அவருடைய இந்தக் கருத்து அனைவரையும் கோபப்படுத்தியது. 


அதையடுத்து வாட்ஸ் அப், முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் ராதா ராஜனுக்கு கடுமையான கண்டனங்களும் எதிர்ப்புகளும் எழுந்தன. மேலும் சென்னை பெசன்ட் நகரிலிருக்கும் அவரது வீட்டு முன்பு நேற்று பலர் கூடி தங்கள் எதிர்ப்பைக் காட்ட கோஷங்கள் எழுப்பி வந்தனர். 


மன்னிப்பு கேட்டார்:-


இந்நிலையில், ராதா ராஜன் 'தனது கருத்துகள் தமிழக மக்கள் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன். நான் என்னிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதில் சொல்லும்போது ஒரு உதாரணத்துக்கு இப்படி பதில் கூறினேன், மாறாக மக்களின் மனதை காயப்படுத்துவது என்று நோக்கமல்ல. என் வார்த்தைகளுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதற்காக என் வீட்டு முன்பு போராட்டம் நடத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.