புதுடெல்லி: ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 5-ம் தேதி காலமானார். இந்நிலையில் அவரது மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. 


ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி தமிழ்நாடு தெலுங்கு யுவா சம்மேளனம் மற்றும் ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தனர். 


ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் அம்மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது. மேலும் அப்பல்லோ மருத்துவமனை, தமிழக மற்றும் மத்திய அரசுகள் ஜெயலலிதா மரணம் தொடர்பாக முறையான விளக்கம் அளிக்க வேண்டும் வலியுறுத்தப்பட்டிருந்தன. 


இவற்றை விசாரித்த சுப்ரீம் கோர்ட் மனுக்களை இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஜெயலலிதா மரணத்தில் மர்ம இருப்பதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.