சென்னை: நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மக்கள் யாரும் வெளியில் நடமாடவோ அல்லது கூட்டமாகவோ கூடவோ தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வீடுகளில் முடங்கி இருக்கும் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் மளிகை பொருட்களை வழங்குவதற்கு 500 ரூபாய் மதிப்பிலான 19 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை தமிழக அரசு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக அரசின் இந்த முடிவு பாராட்டக்குரியது என்றாலும், இந்த சலுகை ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டும் கிடைக்கும். ஆனால் ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு இந்த பயன்  கிடைக்காது. இந்த சூழ்நிலையில், தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 


அந்த மனுவில்,  ஊரடங்கு உத்தரவால் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் ரூ.500 மதிப்பிலான ரேஷன் கடை மளிகைப் பொருட்களை, ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு மட்டும் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. எனவே இந்த சலுகையை ரேஷன் கார்டு இல்லாத அனைவருக்கும் வழங்கக்கோரி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


அந்த தொகுப்பில் இடம் பெற்று மளிகை பொருட்கள்:- 


1. துவரம் பருப்பு அரை கிலோ
2. உளுந்தம் பருப்பு அரை கிலோ
3. கடலைப் பருப்பு கால் கிலோ
4. மிளகு 100 கிராம்
5. சீரகம் 100 கிராம்
6. கடுகு 100 கிராம்
7. வெந்தயம் 100 கிராம்
8. பொட்டுக்கடலை 250 கிராம்
9. நீட்டி மிளகாய் 150 கிராம்
10. தனியா 100 கிராம்
11. மஞ்சள் தூள் 100 கிராம்
12. டீத்தூள் 100 கிராம்
13. உப்பு ஒரு கிலோ
14. பூண்டு 250 கிராம்
15 கோல்டு வின்னர் சன் பிளவர் ஆயில் 100மிலி
16. பட்டை 10 கிராம்
17. சோம்பு 50 கிராம்
18. மிளகாய் தூள் 100 கிராம்
19. புளி 250 கிராம்