கோவை மார்க்சிஸ்ட் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!
கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கோயம்புத்தூர் காந்திபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பெட்ரோல் குண்டுகளை வீசிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.