பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.39 காசுகளும். டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.04 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.


பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 39 காசுகளும், டீசல் விலை 1 ரூபாய் 4 காசுகளும் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. 


இதனிடையே மே 1-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்யும் முறை நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த நடைமுறை முதற்கட்டமாக புதுச்சேரி, விசாகப்பட்டினம், ஆந்திரா, உதய்பூர், ஜாம்ஷெட்பூர் மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களில் செயல்பாட்டுக்கு வருகிறது.