புதுடெல்லி, அக்டோபர் 8: இன்று மீண்டும் பெட்ரோல் டீசல் விலைகள் உயர்ந்துள்ளன. இதைத் தொடர்ந்து நாட்டின் பல இடங்களில் விலை மீண்டும் சதமடித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் (Chennai) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101 -ஐ தாண்டியுள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை 26 காசுகள் அதிகரித்து ரூ.101.01 க்கு விற்கப்படுகின்றது. ஒரு லிட்டர் டீசலின் விலை 34 காசுகள் உயர்ந்து 96.60 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலையும் ரூ.100-ஐ நெருங்கி வருவதால் மக்களின் சுமை கூடியுள்ளது. 


மும்பையில் டீசல் (Diesel) விலை லிட்டருக்கு 37 பைசா உயர்ந்து 100-ஐ நெருங்கியது. தற்போது அங்கு பெட்ரோல் விலை ரூ .99.92 ஆக உள்ளது. மும்பையில், பெட்ரோல் விலை, 29 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ. 109.54 ஆக உள்ளது.


ALSO READ: பெட்ரோல் ஸ்கூட்டரை மின்சார ஸ்கூட்டராக மாற்றலாமா; அதற்கான செலவு எவ்வளவு..!!! 


தேசிய தலைநகரில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 103.54 ஆக உள்ளது. இங்கு பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்துள்ளது. டீசல் விலை 35 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் ரூ. 92.12-க்கு விற்கப்படுகின்றது.


கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 104.23-க்கும் மற்றும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ .95.23-க்கும் விற்பனை ஆகின்றன.


நாடு முழுவதும் பெட்ரோல் (Petrol)  டீசல் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மதிப்பு கூட்டப்பட்ட வரியைப் பொறுத்து மாநிலத்துக்கு மாநிலம் விலைகள் மாறும்.


ALSO READ: வாகனத்தின் மைலேஜை அதிகரிக்க “இவற்றை” இன்றே காரில் இருந்து நீக்கவும் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR