அரசு மருந்தாளுநர் பணியிடங்களுக்கான தேர்வில், பி.பார்ம் பட்டதாரிகளையும் அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை : தமிழகத்தில் அரசு மருந்தாளுநர்கள் பணியிடங்களுக்கான தேர்வில், பிபார்ம் பட்டதாரிகளும் விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருந்தாளுநர்கள் பணி தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப வசதியை நீட்டிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 


நவீன் குமார் என்ற பி.பார்ம் பட்டதாரி தொடர்ந்த வழக்கில், மருந்தாளுநர் பணிக்கு பி.பார்ம் குறைந்தபட்ச கல்வித்தகுதி என பிறப்பிக்கப்பட்ட அரசாணை பின்பற்றப்படவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டது.


ஆனால் பி.பார்ம் பட்டதாரிகளையும் விண்ணப்பிக்க அனுமதித்தால், தேர்வு நடைமுறைகள் தாமதமாகும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசுத்தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், கூடுதல் கல்வித்தகுதி பெற்றிருப்போரின் விண்ணப்பங்களை நிராகரிக்க முடியாது எனக் கூறி, அரசு மருந்தாளுநர் பணியிடங்களுக்கு பி பார்ம் பட்டதாரிகளையும் அனுமதிக்க உத்தரவிட்டனர்.


மேலும், ஆன்லைன் விண்ணப்ப வசதியை ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நீட்டிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த உத்தரவு, வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனக் கூறி ஏப்ரல் 8ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.