ஆழியாறு அணை தொடர்பாக கேரள முதல்வர் பினராயி, தமிழக முதல்வர் எடப்பாடி-யிடம் நேரடியாக பேச வேண்டும் என கேரள எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக விவசாயிகளின் தேவைக்கு காவிரி நீரை மக்கள் எதிர்பார்பதைப் போல, கேரள மாநில பாலக்காடு பகுதி மக்கள் தமிழகத்தின் பரம்பிக்குளம் ஆழியாறு அணையில் இருந்து நீரை எதிர்பார்த்து வருகின்றனர்.


ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு நீரை திறந்துவிட வேண்டி, நேற்றைய தினம் கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார். 


இதனையடுத்து இன்று, கேரள மாநில எதிர்கட்சி தலைவர் ரமேஷ், இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் பினராயி நேரடியாக சென்று தமிழக முதல்வரிடம் பேசவேண்டும் என தெரிவித்துள்ளார்.


மேலும் இந்த பிரச்சணை தொடர்ந்து நடைப்பெற்று வருவதாகவும், இதற்கு தீர்வு காண முதல்வர் கடித தொடர்பினை விட்டு நேரடியாக களத்தில் இரங்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


தமிழகத்திலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது குறித்த ஒப்பந்தத்தின் படி, கேரளாவிற்கு தினம் 400 கணஅடி தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும் எனவும், ஆனால் தற்போது வெறும் 100 கணஅடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது எனவும் ரமேஷ் சென்னித்தலா குற்றம்சாட்டியுள்ளார்.