500 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி அசத்திய சிறுமி தாரகை ஆராதனா. அகற்றிய பிளாஸ்டிக்கை விற்று வரும் பணத்தை முதல்வரிடம் வழங்க திட்டம். "கடலைக் காக்கும் கடல் மாதா" என புகழாரம். நமக்கு மட்டுமில்லை, அனைவருக்கும் ஒரு உதாரணமாக இருக்கும் அவரைப்பற்றி அறிந்துக்கொள்ளுவோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடலில் பிளாஸ்டிக் கழிவுகளால் பல்வேறு உயிரினங்கள் பாதிக்கப்படுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னையை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் கோவளம் முதல் நீலாங்கரை வரையிலான 18 கிலோ மீட்டர் தூரத்தை 6 மணி நேரம் 14 நிமிடங்கள் கடலில் தொடர்ந்து நீச்சல் அடித்து கடந்து உலக சாதனை படைத்துள்ளார்.


சென்னை காரப்பாக்கத்தை சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்த் கடல் வள பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளதோடு, ஆழ்கடலில் திருமணம் நடத்தியது, சைக்கிள் ஓட்டியது, யோகா செய்வது கிரிக்கெட் விளையாடியது, உடற்பயிற்சி செய்வது சுதந்திர தினத்தன்று ஆழ்கடலில் தேசியகொடி பறக்கவிடுவது என பல்வேறு வியப்பூட்டும் நிகழ்வுகளுக்கு முகவரியாக உள்ளார்.


ALSO READ | மூதாட்டிக்கு செருப்பு சரி செய்து அணிவித்த டிஎஸ்பி, இணையத்தில் வைரலாகும் போட்டோ


கடந்த 10 வருடங்களுக்கு மேலாக ஆர்வமுள்ள சிறுவர் சிறுமியர் மற்றும் இளைஞர் பட்டாளத்துக்கு SCUBA DIVING எனும் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி அளித்து வரும் இவர்தான் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காவல்துறையினருக்கும் ஆஸ்தான ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் என்ற பெருமைக்குரியவர்.


அரவிந்த் தன் மகள் தாரகை ஆராதனாவை பிறந்த மூன்றாவது நாளிலிருந்து தண்ணீருக்கு பழக்க படுத்தியதன் விளைவாக ஒன்பது மாதங்களில் கடலில் மிதக்கும் தன்மையை உள்வாங்கிக் கொண்ட தாரகை இரண்டரை வயதிலேயே கடலில் நீந்தும் அளவுக்கு திறன் பெற்றுள்ளார்.


இதைத்தொடர்ந்து அத்தகைய கழிவுகளால் பல்வேறு உயிரினங்கள் பாதிக்கப்படுவது குறித்து உணர்ந்ததன் அடிப்படையில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்துள்ளார்.


ALSO READ | புதிய வரலாறு படைத்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ-மாணவியர்கள்


அதன் ஒரு பரிமாணமாக தாரகை ஆராதனா கடலோர பாதுகாப்புதுறையின் அனுமதியுடன் கோவளம் முதல் நீலாங்கரை வரையிலான 18 கி.மீ தூர கடற்பரப்பை 6 மணி நேரம் 4 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளார். அசிஸ்ட் வேர்ல்டு ரெக்கார்டு என்ற உலக சாதனை நிறுவனம் தாரகையின் சாதனையை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளது.


சிறு வயது முதலே தந்தையுடன் கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது பிளாஸ்டிக் கழிவுகளை கண்டால் அதனை கையோடு அகற்றி கொண்டு வந்து அதனை வீட்டில் சேகரிப்பதை வாடிக்கையாக தாரகை செய்துள்ளார்.


இதுவரை சுமார் 500 கிலோவிற்கும் மேலான பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து அதனை விற்று 13 ஆயிரம் வரை சேர்ந்துள்ளாராம்.


இன்னும் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து அதனை விற்பதன் மூலம் கிடைக்கும் ஒரு நல்ல தொகையை  தமிழக முதலமைச்சரிடம் கொடுத்து பிளாஸ்டிக் ஒழிப்பை வழியுறுத்த உள்ளதாக தாரகை சொல்வதை கேட்கையில் நமக்குள் குற்ற உணர்ச்சி ஏற்படுவதை தடுக்க முடியவில்லை.


ALSO READ | நாட்டிற்கு பெருமை சேர்த்த 11 வயது சிறுமி! 'NASA'விடம் இருந்து பாராட்டு!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR