விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில்  வழக்கு தொடரப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சர்கார் திரைப்படத்தின் கதை தன்னுடைய கதை எனவும், செங்கோல் என தான் எழுதிய கதையினை திருடி இயக்குநர் AR முருகதாஸ் சர்கார் திரைப்படத்தினை எடுத்திருப்பதாகவும் வருண் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். 


இந்த வழக்கினை அவசர வழக்காக சென்னை ஐகோர்ட் இன்று காலை விசாரிக்கின்றது!


AR முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'சர்கார்'. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி, யோகி பாபு என பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 


துப்பாக்கி, கத்தி திரைப்படத்திற்கு அடுத்து மூன்றாவது முறையாக நடிகர் விஜய் மற்றும் AR முருகதாஸ் இப்படத்தில் இணைந்துள்ளனர். நடிகர் விஜய்-ன் 62-வது திரைப்படமான இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்ற இந்த இசைவெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் அரசியல் பற்றி தெரிவித்தக் கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாக மாறியது. 


இந்நிலையில் தற்போது இப்படத்திற்க தடைவிதிக்க கோரி வருண் என்கிற ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி எம்.சுந்தர் முன்பு மனுதாரர் தரப்பு வக்கீல் எம்.புருஷோத்தமன் முறையிட்டார். அந்த வகையில் இந்த வழக்கினை அவசர வழக்காக சென்னை ஐகோர்ட் இன்று காலை விசாரிக்கின்றது.