தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு இன்று துவங்கி நடைபெறுகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மொத்தம் 8,87,992 பேர் இந்த தேர்வை எழுத இருக்கின்றனர்.  2018-19 கல்வியாண்டிற்கான  பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று (மார்ச் 1) முதல் மார்ச் 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 


தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து 7082 பள்ளிகளைச் சேர்ந்த 8,87,992 பேர் இந்த தேர்வை எழுத இருக்கின்றனர்.  இதில் 4,60,006 மாணவிகள், 4,01,101 மாணவர்கள், 2 திருநங்கையர்கள், 45 சிறை கைதிகள் மற்றும் 26,885 தனித்தேர்வா்கள் அடங்குவர். பொதுத்தேர்வுக்காக மொத்தம் 2,941 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


இந்தாண்டு நடைபெறும் வகுப்பு தேர்வு முதல் பன்னிரண்டாம் மாணவர்கள், 200 மதிப்பெண்களுக்கு பதிலாக 100 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதுகின்றனர். 


அதன்படி 6 பாடங்களுக்கு மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் தேர்வு எழுதுவர். தேர்வுகள் காலை 10.00 மணிக்கு தொடங்கி மதியம் 12.45 மணிக்கு முடியும். முதல் 15 நிமிடங்கள் கேள்வித்தாள் வாசிப்பு, அடுத்த இரண்டரை மணி நேரம் தேர்வு நடைபெறும். 


தேர்வு நடப்பதை கண்காணிக்க 43,000 ஆசிரியர்கள் தேர்வறை கண்காணிப்பாளர்களாக பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு முறைகேடுகளைத் தடுக்க 4,000 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.