தமிழக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் வாழ்த்து
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி கட்சி அமோக வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் திமுகவுக்கு மட்டும் 125 இடங்கள் கிடைத்தது.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி கட்சி அமோக வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் திமுகவுக்கு மட்டும் 125 இடங்கள் கிடைத்தது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி கட்சியைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்களையும் சேர்த்து மொத்தம் 133 எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் உள்ளனர்.
இதற்கிடையில் தமிழக முதல் அமைச்சராக திமுக (DMK) தலைவர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) இன்று பதவி ஏற்றார். அவரை தொடர்ந்து துரைமுருகன் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் 33 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஒவ்வொருவரும் உறுதிமொழியை வாசித்து அமைச்சர்களாக பதவியேற்றனர். இன்றைய பதவியேற்பு விழா கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அனைவருக்கும் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார் ஆளுநர்.
தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு, பிரதமர் மோடி, வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார். அவர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறி ட்வீட் செய்துள்ளார்.
அப்போது மு.க.ஸ்டாலின் உறுதிமொழியை ஏற்ற போது, அவரது மனைவி துர்கா ஸ்டாலின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது. பின்னர் யாரும் கவனிக்காவண்ணம் அவர் கண்களை துடைத்துக் கொண்டார். இந்த விழாவில் கலந்து கொண்ட திமுக இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏவும் ஆன உதயநிதி ஸ்டாலினும் ஸ்டாலின் பதவியேற்பின் போது கண்கலங்கினார்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR