PM Modi: தென்மாவட்ட மக்களுக்கு நற்செய்தி... சிறப்பு ரயிலை தொடங்கிவைக்கும் பிரதமர் - முழு விவரம்!
Tamil Nadu New Train Services: சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் மட்டுமின்றி, பிரதமர் மோடி மேலும் 2 சிறப்பு ரயில் சேவைகளை திறந்துவைக்கிறார். இந்த புதிய ரயில் சேவைகளை குறித்த முழு தகவல்களையும் இங்கு காணலாம்.
Tamil Nadu New Train Services: சென்னையில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவும், புதிய விமான முனையம், ரயில் சேவைகள் உள்ளிட்ட திட்டங்களை தொடங்கிவைக்கவும் பிரதமர் மோடி இன்று (ஏப். 8) மதியம் வர உள்ளார். தொடர்ந்து, சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி சென்னையில் வந்தே பாரத் ரயில் மட்டுமின்றி, வேறு இரண்டு புதிய ரயில் சேவையையும் இன்று தொடங்கிவைக்கிறார். அதாவது, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாலை நடைபெறும் நிகழ்வில் சென்னை - கோவை வழித்தடத்தில் செல்லும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கிவைக்கிறார்.
தொடர்ந்து, தாம்பரம் - செங்கோட்டை இடையே எக்ஸ்பிரஸ் சேவையை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். மேலும், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகள் பயன்பெறும் வகையில் திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளியில் இருந்து டீசல் - எலெக்ட்ரிக் ரயில் சேவையை அவர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
திருத்துறைப்பூண்டி மற்றும் அகஸ்தியம்பள்ளி இடையே ரூ. 294 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 37 கி.மீ., அகல ராயில் பாதை திட்டத்தையும் பிரதமர் தொடங்கிவைக்கிறார் வைக்கிறார். இதன் மூலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அகஸ்தியம்பள்ளியில் நடைபெறும் உப்பு உற்பத்தியாளர்களுக்கு பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் - செங்கோட்டை
இந்த ரயில் சேவை இன்று தொடங்கிவைக்கப்படுகிறது. மேலும், தாம்பரம், விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகர், திருநெல்வேலி, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி, செங்கோட்டை ஆகிய வழித்தடங்களில் செல்கிறது. இந்த ரயில் சேவையில் முன்பதிவு செய்தும் பயணிக்கலாம்.
வழக்கமாக, தாம்பரத்தில் இரவு 9 மணிக்கு புறப்படும் இந்த ரயில் (20683), திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக (20684) செங்கோட்டையில் திங்கட்கிழமை மாலை 4.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில், செவ்வாய் காலை 6.05 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் சேவை வாரம் ஒரு முறை இயக்கப்படுகிறது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு (மே 29 வரை) சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் புறப்படும் இந்த ரயில், அடுத்து செங்கோட்டையில் இருந்து திங்கட்கிழமை தோறும் மறுமார்க்கமாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜுன் முதல் வாரம் 3 முறை
இந்த தாம்பரம் - செங்கோட்டை ரயில் சேவை வரும் ஜுன் மாதத்தில் இருந்து, வாரம் மூன்று முறை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவதும், ஜுன் 1ஆம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து, ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய கிழமைகளிலும், செங்கோட்டையில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளிலும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலில், ஏசி 2ஆம் அடுக்கு - 2 பெட்டிகள், ஏசி 3ஆம் அடுக்கு - 5 பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட வகுப்பு - 5 பெட்டிகள், முன்பதிவில்லாதது - 3 பெட்டிகள், சரக்கு மற்றும் பிற தேவைகளுக்கு - 2 பெட்டிகளை கொண்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று தொடங்கும் ரயில் சேவையின் நேர அட்டவணை வழக்கத்தை விட முற்றிலும் மாறுப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை 6.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயில், நாளை காலை 9.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மேலும், நாளை மறுமார்க்கத்தில் ரயில் இயக்கப்படாது என தெரிகிறது. ஏனென்றால், இது தொடக்க விழாவுக்காக சிறப்பாக இயக்கப்படும் ரயிலாகும்.
திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி ரயில்
திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி ரயில் தினசரி இயக்கப்படும். டீசல் - எலெக்ட்ரிக் வகை ரயிலான இது, திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி வழித்தடத்தில் தினமும் இரண்டு முறையும், அகஸ்தியம்பள்ளி - திருத்துறைப்பூண்டி வழித்தடத்தில் தினமும் இரண்டு முறையும் செல்கின்றன.
திருத்துறைப்பூண்டி, கரியப்பட்டினம், குருவாபுலம், நெய்விளக்கு, தோப்புத் துறை, வேதாரண்யம், அகஸ்தியம்பள்ளி ஆகிய வழித்தடங்களில் செல்கின்றனர். காலை 6.45 மணிக்கு திருத்துறைப்பூண்டியில் (76628) புறப்படும் இந்த ரயில், காலை 7.40 மணிக்கு அகஸ்தியம்பள்ளி சென்றடையும். அடுத்து மதியம் 3.30 மணிக்கு திருத்துறைப்பூண்டியில் புறப்படும் ரயில் (76630), மாலை 4.25 மணிக்கு அகஸ்தியம்பள்ளி சென்றடையும்.
அகஸ்தியம்பள்ளியில் (76627) இருந்து காலை 7.55 மணிக்கு புறப்பட்டு, 8.50 மணிக்கு திருத்துறைப்பூண்டியை வந்தடையும். மேலும், மாலை 4.40 மணிக்கு அகஸ்தியம்பள்ளியில் இருந்து புறப்படும் ரயில் (76629), மாலை 5.35 மணிக்கு திருத்துறைப்பூண்டியை வந்தடையும். இந்த ரயில் சேவை இன்று முதல் தொடங்கப்படுகிறது. இந்த ரயில் சேவை முழுவதுமாக முன்பதிவு இல்லாமல் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ