Coimbatore PM Modi Roadshow: பாஜக தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுக்க பல்வேறு களப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வரும் மக்களவை தேர்தலில் பாஜக, அதிமுக அல்லாத கூட்டணியை உருவாக்கி உள்ளது. இதன்மூலம், பாஜகவுக்கு மட்டும் எவ்வளவு வாக்கு சதவீதம் இங்கு உள்ளது என்பதை அறிந்துகொள்ளும் முனைப்பில் அதன் தலைமைகள் உள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறிப்பாக, கொங்கு மண்டலத்திலும், தென் மாவட்டங்களிலும் பாஜக சற்று வளர்ச்சி பெற்றிருக்கிறது எனலாம். அங்கு அவர்களுக்கு நல்ல வாக்கு சதவீதமும் உள்ளது. கடந்த சட்டப்பேரவையை தேர்தலிலும் கோவை தெற்கு, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில் என நான்கு தொகுதியில் பாஜக வெற்றி பெற்றதும் இந்த தொகுதிகளில்தான். 


எனவே, மக்களவை தேர்தலிலும் திருநெல்வேலி, கன்னியாகுமாரி, தென்காசி, ராமநாதபுரம், கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளை பாஜக குறிவைத்து வருகிறது. அந்த வகையில், பிரதமர் மோடியும் அங்கு அதிகமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், கோவையில் வரும் மார்ச் 18ஆம் தேதி பிரதமர் மோடி ரோட் ஷோ நடத்த திட்டமிட்டப்பட்டது.


மேலும் படிக்க | ‘தமிழ் தெம்பு’ திருவிழாவால் விழா கோலம் பூண்ட ஈஷா: 17-ம் தேதி ரேக்ளா பந்தயமும் நடைபெறும்


பிரதமர் மோடி பங்கேற்கும் இந்த ரோட் ஷோ நிகழ்ச்சிக்கு காவல்துறையினர் பாதுகாப்பு காரணங்களால் அனுமதி மறுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து, கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் காவல் அதிகாரிகளுடன் மத்திய சிறப்பு பாதுகாப்பு படை எஸ்பிஜி குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர்.


சுமார் இரண்டு மணி நேர ஆலோசனைக்கு பிறகு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனர். பிரதமர் நிகழ்ச்சிக்கான அனுமதி மறுப்பு மற்றும் மத்திய பாதுகாப்பு குழுவினருடனான ஆலோசனை தொடர்பாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனிடம் கருத்து கேட்க முற்பட்டபோது தெளிவான ஒரு முடிவே இல்லாமல் கருத்து கூற முடியாது எனக் கூறி சென்றார்.


மார்ச் 18ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுவதாலும் இதுவரை கோவையில் எந்த ஒரு ரோட் ஷோ நிகழ்ச்சிக்கும் அனுமதி வழங்கவில்லை என்பதாலும் பிரதமருக்கான தனிப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் காரணத்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்திருப்பதாக மாநகர காவல்துறை சார்பில் தகவல் கூறப்பட்டுள்ளது. 


இதனிடையே பாஜக மாநில பொதுசெயலாளர் ஏ.பி.முருகானந்தம் தலைமையில் பாஜகவினர் பிரதமருக்கு பாதுகாப்பு வேண்டுமென காவல் ஆணையரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தற்போது பாஜகவினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில், இன்னும் சற்று நேரத்தில் இந்த வழக்கின் தீர்ப்பை ஆனந்த வெங்கடேசன் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | 'இந்தியா கூட்டணி ஊழல் கூட்டணி' கன்னியாகுமரியில் முழங்கிய பிரதமர் மோடி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ