மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி... மூன்று நாள் சுற்றுப்பயணம்!
பிரதமர் மோடி ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து தமிழகத்திற்கு பயணங்களை மேற்கொண்டு வரும் நிலையில், மூன்று நாள் சுற்றுப்பயணமாக வரும் 15ம் தேதி தமிழகம் வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
PM Modi to visit Tamil Nadu: பிரதமர் மோடி ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து தமிழகத்திற்கு பயணங்களை மேற்கொண்டு வருகிறார். ஜனவரி 2ம் தேதி திருச்சிக்கு வந்து, விமான நிலைய புதிய முனையம் உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர், பின்னர் ஜனவரி 19ம் தேதி சென்னையில் கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைத்தார். பின்னர், ரமார் கோயில் பிராண் பிரத்யஷ்டைக்கு முன்னதாக, 20, 21-ம் தேதிகளில் திருச்சி ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி கோயில்களுக்குச் சென்று வழிபட்டார்.
‘என் மண், என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழா
பின்னர், பிப்ரவரி 27ம் தேதி பல்லடத்தில் நடந்த ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்திலும், மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் 28-ம் தேதி தூத்துக்குடியில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் திருநெல்வேலியில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி தமிழகம் வந்த பிரதமர் மோடி (PM Narendra Modi), கல்பாக்கத்தில் விரைவு ஈனுலையை தொடங்கி வைத்த தோடு, சென்னை நந்தனத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
சேலம், கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதாக தகவல்
இந்நிலையில், பிரதமர் மோடி, மூன்று நாள் சுற்றுப்பயணமாக வரும் 15ம் தேதி தமிழகம் வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, சேலம் மற்றும் கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. சேலத்தை ஒட்டியுள்ள 4 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்ளும் வகையில் அந்த பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதன் பின்னர் மார்ச் 16ம் தேதி கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுகூட்டத்தில் கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மக்களவை தொகுதிகளுக்கு பரப்புரை மேற்கொள்கிறார். இதற்கடுத்த நாள் கோவையில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார் என கூறப்படுகிறது.
முன்கூட்டியே திட்டமிடப்பட்டுள்ள பயணம்
வரும் 22 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவார் என சொல்லப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே திட்டமிடப்பட்டுள்ள இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. முன்னதாக, திருப்பூர், திருநெல்வேலி மற்றும் சென்னை ஆகிய பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொண்ட கூட்டங்களில், கூட்டணி கட்சித் தலைவர்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என சொல்லப்பட்டிருந்த நிலையில் ஒரு சிலர் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் படிக்க | பாஜகவில் இணைந்த ஓய்வு பெற்ற காவல் துறையினர்... காஞ்சீபுரத்தில் நடந்த நிகழ்ச்சி!
கூட்டணி பேச்சு வார்த்தை
தற்போது ஓபிஎஸ், டிடிவி தினகரன், தேமுதிக மற்றும் பாமக உடன் கூட்டணி பேச்சு வார்த்தையை முடித்து பிரதமர் கலந்து கொள்ளக்கூடிய பொதுக்கூட்டங்களில் இக்கட்சிகளின் தலைவர்களை கலந்து கொள்ள செய்ய வேண்டும் என்பது பாஜகவின் திட்டமாக உள்ளது என கூறப்படுகிறது. இதற்காக டெல்லியில் இருந்து மத்திய அமைச்சர்கள் இங்கு முகாமிட்டு இவர்களோடு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதே போல நாளை தமிழகத்தில் போட்டியிடக்கூடிய பாஜக வேட்பாளர்களின் பெயர் பட்டியலும் வெளியாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்ட நிலையில். தற்போது பாமக மற்றும் தேமுதிகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வரும் நிலையில் நாளை இந்த வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது என்பது தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | ஜாபர் சாதிக் விவகாரம்: களத்தில் இறங்கியது அமலாக்கத்துறை - சிக்கப்போவது யார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ