திருப்பூருக்கு இன்று வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, அரசு நிகழ்ச்சியிலும், பா.ஜ.க. பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து தனி விமானம் மூலம் புறப்படும் பிரதமர் மோடி இன்று பிற்பகல் 2.35 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு 3.05 மணிக்கு திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூருக்கு வருகிறார்.


அங்கு நடைபெறும் அரசு விழா மற்றும் பாஜக தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதில், திருப்பூரில் ESI மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து தொடங்கி வைக்கிறார்.


இந்த நிகழ்ச்சி முடிந்ததும், அதே பகுதியில் நடைபெறும் பா.ஜ.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். இதில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.


பிரதமர் பங்கேற்க உள்ள அரசு விழா மேடை மற்றும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்ட மேடை தேசியப் பாதுகாப்பு படையினரின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது. விழா நடைபெறும் இடங்களுக்குச் செல்ல அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே சோதனைக்குப் பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர். பிரதமர், தமிழக முதல்வர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களின் வருகையை ஒட்டி 2 ஆயிரத்து 500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.