நாளை பிரதமர் சென்னை வருகை!! பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவும் பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்.
மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னை கிளாம்பாக்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள பிரமதர் மோடி நாளை தமிழகம் வருகிறார். அங்கு வரும் அவர் தமிழக மக்களுக்காக பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பார். பின்னர் அங்கிருந்து கூட்டணி கட்சிகளுடன் வண்டலூர் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதனையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் தமிழக பாஜக தலைவர் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்த பொதுக்கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்ப்பாரா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
நாளை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து நண்பகலுக்கு புறப்பட்டு பிற்பகலில் சென்னைக்கு வந்தடைவார்.