என் மண் என் மக்கள் நிறைவு விழா நிகழ்ச்சி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மாதப்பூரில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ள நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பணியில் 5000 போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் அவசர ஊர்திகள், தீயணைப்பு வாகனம் உள்ளிட்டவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு மேடை உள்ளிட்ட இடங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.  மேலும், பிரதமர் வருகையையொட்டி இரண்டு நாட்கள் மீன்பிடிக்க தடை விதித்து மீன்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 'கலைஞர் என்றாலே போராட்டம்தான்...' மெரினாவில் நினைவிடம் திறப்பு... கருப்பு சட்டையில் ரஜினி!


பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடி வருவதை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக இன்றும் நாளையும் தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை தடை ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட  விசை படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பாரத பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வருகிறார் நாளை தூத்துக்குடி வ உ சி துறைமுக வளாகத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு துறைமுக விரிவாக்க பணிகள் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியம் முடிவுற்ற திட்ட பணிகளை துவக்கியும் வைக்கிறார்.


இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடி வருவதை முன்னிட்டு பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு படை மற்றும் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் பாதுகாப்பு கருதி இன்று பிப்ரவரி 27 மற்றும் நாளை பிப்ரவரி 28 ஆகிய இரண்டு நாட்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவவள துறை உத்தரவு பிறப்பித்துள்ளது இதைத் தொடர்ந்து மீன்பிடி துறைமுகங்களில் ஆயிரத்திற்கு மேற்பட்ட நாட்டுப் படகுகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன மேலும் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடிப்பில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் அந்நிய படகுகள் மற்றும் நபர்கள் ஊடுருவல் குறித்து தகவல் கொடுக்கவும் மீனவள துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


மீனவர்கள் கைதுக்கு நடவடிக்கை எடுக்காத பாரத பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக  தூத்துக்குடி வரவுள்ள பிரதமருக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் மீனவர் அணி சார்பில் பெரியதாழை கடற்கரை கிராமத்தில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மோடி நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்தின் அருகேயும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரத பிரதமர் மோடி நாளை மறுநாள் தூத்துக்குடி வரவுள்ள நிலையில் அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி மீனவர் அணி சார்பில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக கட்சி நிர்வாகம் அறிவித்துள்ளதால் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மேலும் படிக்க | பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 50 ஆடு வெட்டி 1 டன் பிரியாணி விருந்து!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ