திமுக-காங்கிரஸ் சட்டை பையை நிரப்பவே ஆட்சியை பிடிக்க துடிக்கின்றன: பிரதமர் மோடி
தி.மு.க வும் காங்கிரஸும் ஊழலில் ஊறி திளைத்த கட்சிகள். தனது சட்டை பையை நிரப்பி கொள்ளவே, தி.மு.க - காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க துடிக்கிறது. என்றார் பிரதமர் மோடி.
கோயம்புத்தூரில், மாபெரும் பொது கூட்டத்தில் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று மாலை உரையாற்றினார். அங்கு மாபெரும் மக்கள் வெள்ளத்தை பார்க்க முடிந்தது. வணக்கம் தமிழ்நாடு... வணக்கம் கோயம்புத்தூர்... வெற்றி வேல்...வீரவேல்...என தமிழில் பேச்சை தொடங்கினார் மோடி.
அவர் உரையில் குறிப்பிட்ட முக்கிய விஷயங்கள்:
-நாட்டிற்கு, விடுதலை வீரகள், விஞ்ஞானிகள், சிந்தையாளர்கள் கொங்கு மண் கொடுத்துள்ளது
- தி.மு.க வும் காங்கிரஸும் ஊழலில் ஊறி திளைத்த கட்சிகள். தனது சட்டை பையை நிரப்பி கொள்ளவே, தி.மு.க - காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க துடிக்கிறது.
- திமுக தமிழகத்தில் அனைவருக்குமான கட்சி என்ற நிலையை எல்லாம் எப்போதோ இழந்துவிட்டது.அது கடைசியாக 25 வருடத்துக்கு முன்புதான் தனிப்பெரும்பான்மை பெற்றது.அது ஒரு குடும்பத்துக்கான கட்சி மட்டுமே.
- சுயலாபம் மட்டுமே எதிர்க்கட்சிகளின் இலக்கு. திமுகவும் காங்கிரஸும் எப்படி கொள்ளையடிப்பது என சிந்திக்கின்றனர்.
ALSO READ | நீரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம்: பிரிட்டன் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு
- தி.மு.க காங்கிரஸ் கூட்டணி யால் தமிழகத்திற்கு நல்லாட்சியை தர முடியாது. தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மாவட்டம் தோறும் சமூக விரோதிகளை உருவாக்கி மக்களுக்கு தொந்தரவு கொடுப்பார்கள்.
- திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
- தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அம்மா ஜெயலலிதாவை திமுக எப்படி நடத்தியது என்பதை தமிழ்நாடு நன்றாக அறியும்.
- தமிழகத்தில் 12 லட்சம் இலவச வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுகிறது.
- தமிழகத்தில் 14 லட்சம் குடிநீர் இணைப்புகள் கிராமங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.
- ஜவுளி பூங்காக்கள் அமைப்பதற்கான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. சிறுகுறு தொழில்களுக்கு ஆதரவாக நான் இருப்பேன்.
- குறு சிறு தொழில்கள்துறைதான் தற்சார்பு பொருளாதாரத்தை நன்வாக்குகின்றன.
- கோவை பகுதியில் மத்திய அரசின் கடனுதவி திட்டங்களால், மக்கள் பெருமளவில் பயனடைந்துள்ளனர்.
ALSO READ | சமூக ஊடகங்கள், டிஜிட்டல் மீடியா, OTT-க்கான புதிய விதிகள்.. முக்கிய தகவல்கள்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR