புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தமிழகத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையின் முக்கிய செயல்திட்டங்களை துவக்கி வைப்பார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாலை 4:30 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுவார்.


மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் ராமநாதபுரம் - தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் மற்றும் பெட்ரோல் டீசல்ஃபூரைசேஷன் பிரிவை பிரதமர் மோடி (PM Modi) அர்ப்பணிப்பார் என்று அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது.


நாகப்பட்டினத்தில் காவிரி பேசின் சுத்திகரிப்பு நிலையத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.


இந்த திட்டங்கள் கணிசமான சமூக-பொருளாதார நன்மைகளை விளைவிக்கும் என்றும், ‘உர்ஜா ஆத்மநிர்பர்தா’ அதாவது உறுதியான தற்சார்பு இந்தியா இலக்கை நோக்கிய நாட்டின் பயணத்தை அதிகரிக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


ALSO READ: பிரதமரின் தமிழக பயணம்: தமிழில் பேசி தமிழர்களை வாழ்த்திய மோடி


இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநரும் (TN Governor), முதல்வரும், மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சரும் கலந்து கொள்வார்கள்.


எண்ணூர்- திருவள்ளூர்- பெங்களூரு- புதுச்சேரி- நாகப்பட்டினம்- மதுரை- தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய்த்திட்டத்தின் ராமநாதபுரம்-தூத்துக்குடி பிரிவு (143 கி.மீ) சுமார் ரூ .700 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.


இது ONGC எரிவாயு தளங்களில் இருந்து எரிவாயுவைப் பயன்படுத்தவும், இயற்கை எரிவாயுவை தொழில்கள் மற்றும் பிற வணிக வாடிக்கையாளர்களுக்கு வழங்கவும் உதவும்.


மணலி, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (CPCL) உள்ள பெட்ரோல் டீசல்ஃபூரைசேஷன் பிரிவு சுமார் ரூ. 500 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.


இது கந்தகத்தின் அளவு குறைவாக உள்ள (8 பிபிஎம்-க்கும் குறைவான) சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பெட்ரோலை உற்பத்தி செய்யும். உமிழ்வைக் குறைக்க உதவுவதோடு இது தூய்மையான சூழலை உருவாக்குவதிலும் பங்களிக்கும் என செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.


நாகப்பட்டினத்தில் அமைக்கப்படவுள்ள காவிரி பேசின் சுத்திகரிப்பு நிலையம் ஆண்டுக்கு 9 மில்லியன் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்டதாக இருக்கும். IOCL மற்றும் CPCL ஒன்றிணைந்து ரூ .31,500 கோடி திட்ட செலவில் இதை அமைக்கவுள்ளன.


இது, BS-VI விவரக்குறிப்புகளுக்கு ஏற்ப மோட்டார் ஸ்பிரிட் மற்றும் டீசலை உற்பத்தி செய்வதோடு மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்பாக பாலிப்ரொப்பிலீனை உருவாக்கும். 


ALSO READ: திருக்குறள் சொன்னால் பெட்ரோல் இலவசம்: அசத்தும் தமிழகத்து Petrol Pump


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR