விரைவில் BJP - ADMK கூட்டணியில் DMDK இணையும்: தமிழிசை சவுந்தரராஜன்!
தேமுதிக விரைவில் பாஜக - அதிமுக கூட்டணியில் இணையும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தேமுதிக விரைவில் பாஜக - அதிமுக கூட்டணியில் இணையும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தேமுதிக, புதிய தமிழகம் கட்சிகள் எங்களுடன் சுமூகமான, நட்புணர்வோடு இருப்பதாகவும், விரைவில் பாஜகவுடன் இணையும் எனவும் தெரிவித்தார். பாஜக மாதவாத கட்சியல்ல என கூறிய அவர், மதத்தின் பெயரில் கூட்டணி வைத்துள்ள திமுகதான் மதவாத கட்சி எனவும், திமுக தலைவர் ஸ்டாலின் ஊராட்சி சபை நடத்தி மக்களை சந்தித்து நாடகமாடி வருவதாகவும் கூறினார்.
பாஜக - அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என கூறிய தமிழிசை, கூட்டணி தொடர்பாக இன்னும் சில கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும், 21 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் வகையிலும் பாஜக உதவி செய்யும் என தெரிவித்தார். வைகோ பிரதமர் வருகையின் போது கருப்புக்கொடி காட்டுவதாக தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, அவரது கருப்புக்கொடிக்கும், கருத்துக்கும், கழுத்தில் உள்ள கருப்புத் துண்டுக்கும் மரியாதை இல்லை என குறிப்பிட்டார்.
மேலும், பிரதமர் மோடி மார்ச் 1 ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வருகிறார். அதன்பின் சென்னைக்கு மார்ச் 6 ஆம் தேதி அவர் வருகிறார். சென்னையில் நடைபெறும் பிரமாண்ட பொது கூட்டத்தில் கலந்து கொண்டு தொண்டர்கள் முன் பேசுகிறார் என கூறினார்.