பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்..!!
மக்களவைத் தேர்தலில் என்.டி.ஏ அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வாழ்த்து தெரித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் வெற்றி தொடர்பாக பிரதமர் மோடி அவர்களுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தி விவரம்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை தலைமையேற்று வழிநடத்திச் சென்று அமோக வெற்றி பெறச் செய்ததுடன், மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்கவிருக்கும் தங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களவைத் தேர்தலுக்காக வலிமையான அணியை கட்டமைத்ததுடன், அந்த அணியின் வெற்றிக்கான உத்திகளையும் வகுத்த தாங்கள், அனைத்துப் பொறுப்புகளையும் உங்கள் தோள்களில் சுமந்ததுடன், நாடு முழுவதும் 250க்கும் கூடுதலான இடங்களில் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றினீர்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (National Democratic Alliance) சார்பில் போட்டியிட்ட, கிட்டத்தட்ட அனைத்து வேட்பாளர்களையும் ஆதரித்து பரப்புரை மேற்கொண்டீர்கள். உங்களின் இந்த கடுமையான உழைப்பும், மக்கள் மத்தியில் உங்களுக்கு இருந்த ஆதரவும், அவர்கள் உங்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கையும் தான் இந்த வெற்றிக்கு காரணமாகும்.
நாட்டின் வளர்ச்சிக்காவும், முன்னேற்றத்திற்காகவும் கடந்த பத்தாண்டுகளில் உங்கள் தலைமையிலான அரசு ஆற்றிய பணிகளும், படைத்த சாதனைகளும் ஈடு இணையற்றவை. அடுத்த ஐந்தாண்டுகளில் அவற்றை விட அதிகமான சாதனைகளை இந்தியா உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறது. அனைத்து எதிர்பார்ப்புகளையும் நீங்கள் நிறைவேற்றுவீர்கள்; வளமான, வலிமையான நாடாக இந்தியாவை உருவாக்குவீர்கள் என்று நம்புகிறேன். அதற்கான பயணத்தில் நீங்கள் வெற்றி பெற பா.ம.க. சார்பில் வாழ்த்துக்கள் என பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைந்து பாமக தேர்தலை சந்தித்த நிலையில், போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது. பாமக சார்பில் போட்டியிட்ட சவுமியா அன்புமணி குறைந்ந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார். இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வருத்தமளித்தாலும், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதால் அதை பாமக ஏற்றுக் கொள்கிறது என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியால் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. தேர்தல் முடிவுகள் வருத்தமளித்தாலும், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதால் அதை பாமக ஏற்றுக் கொள்கிறது” என கூறினார்.
மேலும் படிக்க | இந்தியா கூட்டணி வெற்றிக்கு பிள்ளையார் சுழி போட்டது தமிழ்நாடு..! தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ