வன்னியர் கல்வி அறக்கட்டளை குறித்து அவதூறு செய்தி பரப்புவதாகக் கூறி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவர் ராமதாஸின் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுக்குறித்து பா.ம.க. தலைமை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது, 


வன்னியர் கல்வி அறக்கட்டளை உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள வன்னியர் சொத்துகளை பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது துணைவியார் பெயரில் மாற்றி விட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவதூறு பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறி அவருக்கு வழக்கறிஞர் க.பாலு மூலமாக வழக்கறிஞர் அறிவிக்கையை அனுப்பியுள்ளார்.