அதிகமான ஆண் நண்பர்கள்..காட்டிக்கொடுத்த கால் ரேகை.. பெண் செவிலியர் கொலையில் விலகிய மர்மம்!
செவிலியர் செல்வி கொலை வழக்கில் ஒரு மாதத்திற்கு பிறகு திடீர் திருப்பம். தற்கொலை செய்து கொண்ட ஆண் செவிலியர் தான் கொலையாளி என்பதை கால் ரேகையை வைத்து போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தவர் செல்வி(45). இவர் கடந்த மாதம் 24ந்தேதி ஆண்டிப்பட்டி பாப்பம்மாள்புரம் பகுதியில் அவர் வசித்து வந்த வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு நிர்வாணமான நிலையில் கிடந்தார். இந்த சம்பவம் குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிந்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த கொலை சம்பவத்தில் எந்த தடயங்களும் கிடைக்காமல் கால் ரேகை மட்டுமே கிடைத்தது. இதனால் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் பெறும் சிக்கல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து செவிலியர் செல்வியுடன் தொடர்பில் இருந்த நபர்களை பிடித்து விசாரணையில் நடத்தினர் இதில் தொலைபேசியில் தொடர்பு கொண்ட 50 நபர்களையும். இறந்த செவிலியருடன் தொடர்பில் இருந்தவர்கள் வீட்டிற்கு பால், தண்ணீர் சப்ளை செய்பவர் என 300 நபர்களின் கால் ரேகைகளை சேகரித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வந்தனர்.
ALSO READ | தொழில் விரோதப் போட்டியில் தொழில் அதிபரை கொலை செய்ய முயற்சி; 5 பேர் கைது!
ஆனால் கொலை சம்பவம் குறித்து எந்த துப்பும் கிடைக்காததால் கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் தவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கை மீண்டும் ஆரம்பத்தில் இருந்து வெவ்வேறு கோணங்களில் விசாரிக்கும்படி போலீசாருக்கு தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்ரே உத்தரவிட்டார். அதனடிப்படையில் நர்சு கொலை வழக்கு விசாரணை தீவிரப்படுத்தினர். செல்வியிடம் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்களை இந்த மாதம் 10ந்தேதி போலீசார் மீண்டும் விசாரணைக்கு அழைத்தனர். அப்போது தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்த ராமச்சந்திரபிரபு(34) என்பவரையும் அழைத்தனர். இவர் கம்பம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார்.
அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணைக்கு நாளைக்கு விசாரணைக்கு வரவேண்டும் என்று கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அடுத்த நாள் காலை அதாவது 11 ந்தேதி ஆண் செவிலியர் ராமச்சந்திரபிரபு உத்தமபாளையம் அருகே உள்ள ஊத்துக்காடு பகுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாதாக அவரது சடலம் மீட்கப்பட்டது. இதனையடுத்து இறந்த ராமச்சந்திரபிரபு மீது போலீசாருக்கு சந்தேகம் அதிகரித்தது. இதைத்தொடர்ந்து ராமச்சந்திரபிரபு குறித்த விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினர்.
பல்வேறு கட்ட விசாரணைக்கு பின்னர் ஆண்டிப்பட்டி நர்சு செல்வியை கொலை செய்தது மருத்துவ பணியாளர் ராமச்சிந்திரபிரபு தான் என்பதை தற்போது போலீசார் உறுதிபடுத்தியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கேட்ட போது, நர்சு கொலை வழக்கு குறித்து மருத்துவபணியாளர் ராமச்சந்திரபிரபுவிடம் மேற்கொண்ட விசாரணையில் ஆரம்பத்தில் இருந்தே அவர் முன்னுக்கு பின் முரணாக பேசிவந்தார். நர்சு செல்வியிடம் செல்போனில் அடிக்கடி பேசியுள்ளார். இதன்காரணமாக கடந்த 11ந்தேதி விசாரணைக்கு வரும்படி அழைத்து இருந்தோம். ஆனால் அவர் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார். கொலை செய்யப்பட்ட நர்சு செல்வியும், மருத்துவ பணியாளர் ராமச்சந்திரபிரபுவும் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் வேலை செய்து வந்தனர்.
அப்போது இருவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் இருவரும் வெவ்வேறு மருத்துவமனையில் பணியாற்றிய போதும், இவர்களுக்கிடையேயான உறவு நீடித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இருவருக்கும் இடையே பல லட்சக்கணக்கில் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்திருக்கிறது. இவற்றில் கடனாக கொடுத்த பணத்தை திரும்ப கேட்கையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கலாம். . சம்பவத்தன்று மதியம் 2 மணியளவில் ஆண்டிப்பட்டி வந்த ராமச்சந்திரபிரபு, நர்சு செல்வியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பமாக மாறியுள்ளது. அந்த சண்டையில் ராமச்சந்திரபிரபு நர்சு செல்வியை கொலை செய்துள்ளார்.
அதன்பின்னர் சுமார் 3.40 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறி அவர் வீட்டிற்கு சென்றுவிட்டார். மேலும் செல்வியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினையும் எடுத்து கொண்டு சென்றுள்ளார். ராமச்சந்திரபிரபு வந்து சென்றது, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வீட்டில் பதிவாகி இருந்த கால் ரேகையும் ராமச்சந்திரபிரபுவின் கால் ரேகையும் ஒத்து போகிறது. மேலும் ராமச்சந்திரபிரபு தான் நர்சு செல்வியிடம் கடைசியாக போனில் பேசியுள்ளார். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் நர்சு செல்வி கொலை செய்யப்பட்டதற்கு பின்னர் அவரது 3பவுன் தாலிச் செயினை தேனி, பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ராமச்சந்திரபிரபு அடகு வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சி, கால் ரேகை நகையை அடகு வைத்தது உள்ளிட்டவைகளை உறுதி செய்த பின்னரே ராமசந்திர பிரபு தான் குற்றவாளி என உறுதி செய்ததாக தெரிவித்தார்.
ALSO READ | மதுரையில் 110 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடிந்து விழுந்து விபத்து; காவலர் பலி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR