தமிழகத்தில் கலவரம்... போலீசார் துப்பாக்கி சூடு! வாகனத்திற்கு தீ வைப்பு!
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம்: போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி, வாகனங்களுக்கு தீ வைத்ததால் போலீஸ் துப்பாக்கி சூடு.
கள்ளக்குறிச்சி சின்னசேலம் அருகே கணியாமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில் சிறிது நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் அப்பள்ளியின் உரிமையாளரை காவல்துறை கைது செய்ய வேண்டும் என்று தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வந்தது. சமூக வலைதளங்களிலும் மாணவிக்கு ஆதரவாக நீதிகேட்டு மக்கள் பதிவிட்டு வந்தனர். தற்போது அந்த பகுதியில் போராட்டக்காரர்கள் போலீசார் மீது கல் வீசி தாக்கியதால் கள்ளக்குறிச்சி பள்ளியில் உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூர் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி பயின்று வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த 12-ம் வகுப்பு பள்ளி மாணவி அதிகாலை விடுதியின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா வழக்கு: தமிழக அரசு விளக்கம்
இதுகுறித்து தகவல் அறிந்த சின்ன சேலம் காவல் ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பள்ளி மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தை தொடர்ந்து விடுதியில் தங்கி பயின்று வந்த மற்ற மாணவ மாணவிகளை பெற்றோர்கள் மூலம் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும் அவரது இறப்பு குறித்து போலீசார் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயிரிழந்த பள்ளி மாணவியின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் ஏற்பட்டு வருகின்றனர். மாணவியின் உறவினர்கள் அப்பள்ளியின் உரிமையாளரை கைது செய்யக் கோரியும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் நான்கு முனை சாலையில் மறியல் செய்வதற்காக சென்றனர். மறியலில் ஈடுபட முயன்ற உறவினர்களை போலீசார் அப்போது அவர்களை தடுக்க முயன்றதால் போலீசாரின் தடுப்புகளை தாண்டி முன்னோக்கிச் சென்ற பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் பேருந்து நிலையம் அருகே நான்கு முனை சந்திப்பில் இன்றும் சாலையில் அமர்ந்தபடி மாணவிக்கு நியாயம் கேட்டு அப்பள்ளியின் உரிமையாளரை கைது செய்யக் கோரியும் கோஷங்கள் எழுப்பியவாறு சாலை மறியல் ஈடுபட்டனர்.
அப்பொழுது சேலம் செல்லும் சாலை கச்சராபாளையம் செல்லும் சாலை சங்கராபுரம் செல்லும் சாலை சென்னை செல்லும் சாலைகளில் வாகனங்கள் செல்லாதவாறு நீண்ட வரிசைகளில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது, இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது கூட்டத்தை கலைக்க முயன்ற போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே பெரிய பிரச்சனை ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் போலீசார் மீதும், வாகனங்கள் மீதும் கற்களை எறிந்தனர். பின்பு தடியடி நடத்தி போராட்டக்காரர்களை போலீசார் கலைக்க முயன்றனர். பின்பு போலீஸ் வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டது, இதனால் போலீசார் வானை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
மேலும் படிக்க | தற்கொலையா நரபலியா?... கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் திடுக் திருப்பங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ